பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

хxix தருகின்றது. ஏழாவது இயலில் ஆழ்வார் பாசுரங்களில் அமைந்துள்ள அகப்பொருள் தத்துவம் விரிவாக விளக்கப் பெறுகின்றது. எட்டாவது, ஒன்பதாவது பத்தாவது இயல் கள் திருவாய்மொழியிலும் திருவிருத்தத்திலும் அமைந்த தோழி, தாய், மகள் பாசுரங்களின் தத்துவத்தை விரிவாக விளக்குகின்றன. பதினொராவது இயலில் ஆழ்வாகின் தூது பாசுரங்கள் விளக்கம் பெறுகின்றன. பன்னிரண்டாவது இயலில் ஆழ்வாரின் இறையதுபவம் காட்டப்பெறுகின்றது. பதின்மூன்றாவது, பதினான்காவது, பதினைந்தாவது இயல் களில் முறையே வைணவதத்துவங்கள்ாகிய அர்த்த பஞ்சகம், தத்துவத்திரயம், மந்திரங்கள் ஆழ்வார் பாசுரங்களின் அடிப் படையில் விளக்கம் பெறுகின்றன. பின்னிணைப்புகள் மூன்றும் நூலுக்குத் துணையாக அமைந்துள்ளன. திருப்பதித் தமிழ்ப்பணியிலிருந்து ஒய்வு பெற்று 1978 சனவரி 14ஆம் நாள் சென்னையில் குடியேறியதிலிருந்து தேனாய், கன்னலாய், அமுதாய்'த் தித்திக்கும் ஆழ்வார். களின் பாசுரங்களை வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும், பூசித்தும் போக்கினேன் போது (நான். திருவந் 63) என்றவாறு என் காலம் கழிகின்றது. என் ஆராய்ச்சியின் போது ஆழங்கால் பட்ட பாசுரங்களை மீண்டும் மனத்தில் இருத்தி அசைபோடுவதற்குப் பெற்ற வாய்ப்பின் காரணமாக இந்நூல் வெளிவருகின்றது. என் அநுபவம் இப்பனுவலைப் படிப்போரிடமும் ஏற்படுமானால் அதனை யான் பெற்ற பெரும் பேறாகக் கருதுவேன். தமிழகத்தில் சுமார் இருபது ஆண்டுகளும் ஆந்திரத்தில் சுமார் இருபது ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வு ஊதியம் கூடப் பெறாது தவிக்கும் அடியேனுக்கு ஏழுமலையான் ஒரளவு நிதி வழங்கி (நூலின் முட்டுவழியில் சுமார் 50% விழுக்காடு) உதவி புரிந்திராவிடில் இந்நூல் அச்சுவாகனம் ஏறிக் கற்போர் கரங்களில் கவினுறத் தவழ்வதற்குவாய்ப்பே