பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 சடகோபன் செந்தமிழ் திருமேனி அவட்குஅருளிர் என்றக்கால் உம்மைத்தன் திருமேனி ஒளியகற்றித் தெளிவிசும்பு கடியுமே? (4) |திருமேனி அடிகள் . எம்பெருமான்; கடியுமே - தண்டிப்பரோ) சில மேகங்களை நோக்கி, "என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்கட்கு ஏதேனும் தண்டனை நேருமோ?" என்கின்றாள். வடிவழ்கையே அடையாளமாகக் கொண்டு விளங்கும் எம்பெருமானுக்குத் திருமேனி அடிகள்' என்று ஒரு திருநாமம் சாத்துகின்றாள் பராங்குச நாயகி. வடிவழகி னால் ஆன்மாக்கள் அனைத்தையும் தோற்பித்து அடிமை கொள்பவருக்கு இது பொருத்தமான பெயரன்றோ? எதிரிகளையும் அவ்வடிவம் கவருமல்லவா? கண்ணன் துரது போகுங்கால், அவனுக்கு அவையில் எவரும் மரியாதை செலுத்தலாகாது என்று ஆ ைண யி ட் டி ரு ந் தான் துரியோதனன். கண்ணபிரான் ஆங்கு எழுந்தருளுங்கால் அவையிலிருந்த அரசர்கள் அனைவரும் கண்ணனின் சோதி வடிவு கண்டு பரவசராய் எழுந்து மரியாதை செலுத்தினர். துரியோதனனும் துடை நடுங்கி எழுந்துவிட்டு உடனே தன் உறுதி தடுமாறியதற்கு வருந்தி 'என்னே இத்திருமேனி அழகு? என்று கண்ணனை உற்று நோக்கினானாம். இதனைப் பெரியாழ்வாரும், - கழல்மன்னர் சூழக் கதிர்போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்துஉன்னை கோக்கும் கழலை பெரிதுடைத் துச்சோதனனை (பெரியாழ் 1.8 : 5)