பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தத்துவத் திரயம் திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்டு பல உயரிய கொள்கைகள் அடங்கிய ஒரு பரந்த சமயமே வை" சமயம் ஆகும். இச்சமயத்தின் கொள்கைகளை தத்துவம், இதம், புருஷார்த்தம் என்று வகைப்படுத்திப் பேசுவர். நம் மாழ்வார் பிரபந்தங்களில் இம்மூன்று கொள்கைகளும் ஆங்காங்கே அமைந்து கிடக்கின்றன. ஆழ்வார் பாசுரங்கள் தோத்திர நோக்குடையனவாதலின் சாத்திர நூல்களில் இருப்பதுபோல் தத்துவங்கள் விரிவாகக் காணப் பெறுவதில்லை. இனி இச்சமயத்தின் கொள்கைகளை ஆழ்வார் பாசுரங்களின் அடிப்படையில் காண்போம். i. தத்துவம் தத்துவங்கள் மூன்று. அவை சித்து, அசித்து, ஈசுவரன் என்பன. சித்து என்பது உயிர்களின் (ஆன்மாக்களின்) தொகுதி. அசித்து என்பது, மக்கள் விலங்கு முதலிய வற்றின் உடம்பு முதலிய உலகப் பொருள்கள் எல்லா வற்றிற்கும் காரணமான பிரகிருதியாகும். பிரகிருதியை மூலப்பகுதி என்பர். ஈசுவரன் என்பது, இறைவன். இவை மூன்றும் தத்துவத்திரயம் (திரயம் - மூன்று) என்ற பெயரால் வழங்கப் பெறுகின்றன. சித்து: ஞானத்தின் இடிமான ஆன்மாவே சித்து எனப்படும். இது சேததன் எனவும் வழங்கப்பெறும். தேகம்.