பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் #9 என்ற சிவன் கோயில் உள்ளது. இங்குக் கரூர் சித்தர் என்ற பெரியார் ஒருவர் இருந்ததாகவும், அவரிடம் நாய் ஒன்று இருந்ததாகவும் அது திருக்குருகூர் தெருக்களில் விழும் எச்சில் உணவை அருந்தி வந்ததாகவும் அறிகின்றோம். ஒருநாள் அந்த நாய் குருகூரிலிருந்து ஆற்றைக் கடந்து தன் இருப்பிடத் திற்குத் திரும்புங்கால் வெள்ளத்தின் நீர்ச்சுழலில் சிக்கி உயிர் இழந்ததாகவும், அப்பொழுது அதன் உயிர் ஒளிபெற்று மீளா உலகினை அடைந்ததாகவும், இதனை நேரில் கண்ணுற்ற சித்தர் அழகான பாடல் ஒன்றினைப் பாடிய தாகவும் அறிகின்றோம். - வாய்க்கும் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட காய்க்கும் பரமபதம் அளித்தாய் அக்த காயோடு இந்தப் பேய்க்கும் பலமளித்தால் பழுதோ? பெருமாள் மகுடம் சாய்க்கும் படிகவி சொல்லும் ஞானத் தமிழ்க்கடலே. என்பது அவர் பாடிய பாடல். இந்தச் சித்தரும் நம்மாழ் வாரைப் பாடி அவர் திருவருளைப் பெற்றது. நமது நெஞ்சைக் குளுகுளுக்கச் செய்கின்றது. நாமும் மாறன் மலரடியைப் போற்றுகின்றோம். வைணவ உலகமும் ஆழ்வார்களின் தலைவராகிய இவரை, திருக்குருகைப் பெருமாள்தன் திருத்தாள்கள் வழியே திருவான திருமுகத்துச் செவியென்றும் வாழியே இருக்குமொழி என்நெஞ்சில் தேக்கினான் வாழியே எந்தை எதிராசர்க் கிறைவனார் வாழியே கருக்குழியில் புகாவண்ணம்'காத்தருள்வ்ோன் வாழியே காசினியில் ஆரியனாய்க் காட்டினான் வாழியே வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே மதுரகவி தம்பிரான் வாழிவாழி வாழியே என்று போற்றுகின்றது; வாழ்த்தி வணங்குகின்றது.