உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

சடுகுடு ஆட்டம்


இரண்டாம் படத்தில் தோளின் இடப்புறம் பிடித்த கையைக் கொண்டு வருவது போல் படம் இருக்கிறது. மூன்றாம் படத்தில் வலது தோள்புறமாகக் கையைக் கொண்டு வந்து, பாடியவரை முதுகில் துக்கிக் கொண்டு இருப்பது போல் இருக்கிறது. முடியுமானால், இடப்புறமாகவே கொண்டு வரலாம். இல்லையேல், வலப்புறம் கொண்டு போக வாய்ப்பிருந்தால், வலதுபுறமாகக் கொண்டு செல்லலாம். அது, அந்தந்த நேரத்தைப் பொறுத்ததாகும்.

அப்படி, ஆளை முதுகுப்புறம் தூக்கிவிட வேண்டுமானால், தன் முதுகுப்புறத்தைச் சற்றுத்தாழ்த்தி, ஒரு குலுக்கு குலுக்கியவாறு வலது புறத் தோள் புறம் ஆளைக் கொண்டு வந்து, அப்படியே தூக்கிக் கொள்ள வேண்டும். அப்படி கொண்டு வரும்போது, அவரது கால்கள் தரைக்கு மேலே வந்து விடுவதால், அவரது பலம் போய்விடுகின்றது. உடல் சமநிலை இழந்து விடுகிறது.

நன்றாகப் பழகியவர்களே இந்த முறையைப் பின்பற்ற முடியும். இல்லையேல் கை பிசகிக் கொள்ளக்கூடும். தோள் மூட்டு நழுவிக் கொள்ளவும் கூடும். ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள, காயம்கூட ஏற்படவும் வழியுண்டாகும்.