உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சடுகுடு ஆட்டம்

வரவழைத்து விடுகிறது என்பதை உணர்ந்து, தேவையானால், அவசியமானால், முடியுமானால், நம்பிக்கை வருமானால் பிடிக்க முயல வேண்டும்.

மேலே கூறியிருக்கும் கருத்துக்களை நினைவில் வைத்து, பிடித்தாடும் குழுவினர், அவ்வப்பொழுது தன் குழுத்தலைவன் கூறும் கருத்தின்படி, காட்டும் சைகையின்படி நடந்துகொண்டு, வெற்றிகரமாகப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு தன் குழுவை ஒற்றுமையாக நடத்திச் செல்வது குழுத் தலைவனின் தனித்திறமையைப் பொறுத்தே அமைகிறது.

பிடித்தாடும் குழுவினர் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, ஒற்றுமையுடன் ஆட வேண்டும். அதற்கேற்ற வகையில் பிடி முறைகள் ஒவ்வொன்றையும் பின்வரும் பகுதியில் படங்களுடன் விளக்கி யிருக்கிறோம். ஆட்டக்காரர்கள் அறிந்துகொண்டு, ஏற்ற பயிற்சிகளுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டு, அரிய ஆற்றலையும் நேரிய சக்தியையும் பெற்று, புகழ்பெற வாழ்த்தி அழைக்கிறோம். பயிற்சி பெறுக, பயனடைக, என்றும் உங்களை அழைக்கிறோம்.

பிடி முறைகள் (Holds)

பிடிப்பவரின் ஆற்றலை அடிப்படையாக வைத்தே, ஒரு குழுவின் மேன்மையும், வெற்றி பெறும் தன்மையும் அமைந்திருக்கிறது என்று நாம் அறிவோம். தன்னையும் தொடப்படாமல் காத்துக்கொண்டு, தப்பித்துக்கொண்டு, அத்துடன் சக ஆட்டக்காரர்களையும் தொடப்படாமல் காப்பாற்றிக்கொண்டு, ஒவ்வொருவரும் ஆட முயல வேண்டும். அதனால் ஒவ்வொரு ஆட்டக்காரரும் பிடிக்கும் கலையை நன்கு கற்றுத் தேர்ந்திட வேண்டும்.