பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சடுகுடு ஆட்டம்


ஈ) இரு முழங்கால் பிடி முறை (Double Knee Catch)

உ) தொடைப் பிடி முறை (Thigh Catch)

ஊ) இரு தொடைப் பிடி முறை (Double Thigh Catch)

3. இடுப்புப் பகுதி பிடி முறை

அ) இடுப்புப் பிடி முறை (Trunk Catch)

ஆ) ஆளைத் தூக்கும் முறை (Lift Catch)

இ) துணி மூட்டைத் தூக்கும் முறை (Washerman's Catch)

ஈ) கோழி பிடிக்கும் (அமுக்கும்) முறை (Hen Hold)

உ) தோளைப் பிடிக்கும் முறை (Round the Shoulder Catch)

ஊ) கரடிப் பிடி முறை (Bear Hug)

எ) கை கால் பிடி முறை (Wrist and Ankle Catch)

1. கைகளைப் பிடித்து நிறுத்தும் முறை

அ) மணிக்கட்டைப் பிடிக்கும் முறை

மணிக்கட்டு அல்லது முன்கைப் பகுதியைப் பிடித்துப் பாடி வரும் ஆட்டக்காரரைப் பிடிக்கும் முறை இங்கே முதன்முதலாக விளக்கப்படுகிறது.

பாடிவரும் ஆட்டக்காரர் தனது கையை நீட்டித் தொட முயற்சிக்கும் நேரத்தில், படக்கென்று அவரது முன் கையைப் பிடித்துவிடுவதாகும். விரல் பகுதியில் பிடித்தால், வழுவிக் கொண்டு போய்விடக்கூடும். அதனால் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்தால் எலும்பின் பகுதி இணைப்பு இருப்பதால், பிடி கெட்டியாக