பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 45 பத்தாண்டு காலத்திற்கு மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுத்துச் சோதித்துப் பாருங்களேன். இந்தியா உடைந்து போய் விடுகிறதா என்று. எனக்கு இருக்கிற பயமெல்லாம் நீங்கள் அந்தச் சோதனைக்கு முன் வராவிட்டால். எங்கே சிலம்புச் செல்வர் சொன்னதைப் போல இந்தியா உடைந்து விடுமோ என்பதுதான். இந்தியாவின் ஒருமைப்பாடு என்கிற கேடயத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மாநில சுயாட்சி - மாநிலங்களுக்கு உரிமைகள் என்கிற குரலை அடக்கி ஒடுக்கிவிட மத்தியிலிருப்பவர்கள் எண்ணாமல் சாவதானமாகச் சிந்தித்து தி.மு.கழகம் பிரிவினைக் கொள்கையை விட்டுவிட்ட கட்சி - பிரிவினைக் கொள்கையை எதிர்த்த கட்சியான தமிழரசுக் கழகத்துடன் உறவாடிக் கொண்டிருக்கிற கட்சி - நாங்கள் பிரிவினையை விட்டு விட்டோம் என்று அறிவித்த கட்சி என்ற நம்பிக்கையோடு எங்களுடைய வரலாறுகளை ஆராய்ந்து கொண்டிராமல் நான் சொல்லுகின்ற விஷயங்களை ஆராய்ந்து சிந்தித்து, நல்ல முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். மாநில சுயாட்சி ம.பொ.சி.யின் படைப்பு! மேலவை உறுப்பினர்கள் பேச்சு! சட்ட மேலவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் மீது 25-4-74 அன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு முஸ்லிம் லீக் உறுப்பினர் திரு.எம்.எம். பக்கர் பேசியபோது தலைவர் ம.பொ.சி. பற்றிக் குறிப்பிட்ட பகுதி வருமாறு: