உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



122 மூர்த்தி சுவாமிகள் அச்சங்ககாலத்திற்குப் பின்னரே விளங்கியவராதல் வேண்டும். * அன்றியும், சுந்தரமூர்த்திசுவாமிகள், கி.பி.9-ஆம் நூற்றாண்டினிடையில் விளங்கியவராதல் வேண்டுமென்று ஸ்ரீமான் T.A. கோபிநாதராயவர்கள் M.A. செந்தமிழ் 3-ஆம் தொகுதி 9-ஆம் பகுதியில் -நிரூபணஞ்செய்துள்ளனர். கடைச்சங்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்தியகாலங்களிலும் நின்று நிலவியதாகலின், சுந்தரமூர்த்திசுவாமிகள் கடைச்சங்ககாலத்திற்குப் பன்னூற்றாண்டு கட்குப்பின்னரே விளங்கியவராகற்பாலர். இனி, சுந்தரமூர்த்தி சுவாமிகள்காலத்தினராய சேரமான்பெருமானாயனார்க்கு ஆலவாயுறை யிறைவன் றிருமுகமனுப்பியருளிய செய்தியைத் தம் நூலிற் குறித்துப் போந்த கல்லாடனாரும் கடைச்சங்ககாலத்திற்குப் பல நூற்றாண்டுகட்குபின்னரே இத்தமிழகத்தில் வாழ்ந்தவராவரென்பது இனிதுவிளங்கும். இதுகாறுங்கூறியவற்றால், கல்லாடமுடையார் சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராய கல்லாடனாரல்லரென்பதும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே கல்லாடரென்னும் பெயர்பூண்டு விளங்கிய வேறொரு புலவரேயாமென்பதும் புலப்படுதல் காண்க. இனி, நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்குநல்லார்,

  • திருவனந்தபுரம் ஸ்ரீமான் சேஷையரவர்கள் தாம் எழுதியுள்ள "மாணிக்கவாசகர்காலம்' என்னு மாங்கில நூலில், 'பொய்யடிமை யில்லாத புலவர்' என்னுஞ் சொற்றொடர் மாணிக்கவாசக சுவாமிகளையே குறிக்குமென்றும், நம்பியாண்டார் தமது திருத்தொண்டர் திருவந்தாதியிற் கூறியுள்ளபடி கடைச்சங்கப் புலவர்களைக் குறியாதென்றும் எழுதியிருக்கின்றனர். அதற்கு அவர்கள் கூறுங்காரணம் கடைச்சங்கத்தில் - ஜைனர், ---பௌத்தர்முதலிய புறப்புறச்சமயிகளுமிருந்தமையால், அப்புலவர்கட்கு நம் சுந்தரமூர்த்திசுவாமிகள் வணக்கம் கூறியிருக்கமாட்டார்களென்பதே. இஃதுண்மையே. ஆனால் நக்கீரர், கபிலர்; பரணர்முதலிய சிவாநுபூதிச்செல்வர்களும் அச்சங்கத்து வீற்றிருந்தமையால், அப்புலவர்களையே, பொய்யடிமையில்லாத புலவர் என்று - நம்சுவாமிகள் கூறியுள்ளதாகக்கோடற்குத் தடையென்னை? இங்ஙனங்கொள்ளாது, அச்சொற்றொடர் மாணிக்கவாசகப்பெருமானையே குறிக்குமெனக்கூறின், தொகையடியார் ஒன்பதின்மரென்னும் வழக்கொழித்து எண்மரெனவும், தனியடியார் அறுபத்து மூவரென்னும் வழக்கொழித்து அறுபத்துநால்வரெனவுங் கொள்ள வேண்டும். இது முன்னோர்கொள்கைக்கு முற்றிலும் முரணாகின்றது. இனி, நம்பியாண்டார், மணிவாசகப்பெருமானையும், அவர்களருளிய நூலினருமையையும் நன்கறிந்துள்ளாரென்பது. வருவாசகத்தினின்முற்றுணர்ந்தோனைவண்டில்லைமன்னைத் திருவாதவூர்ச்சிவபாத்தியன் செய்திருச்சிற்றம்பலப் பொருளார்தருதிருக்கோவைகண்டேமற்றப்பொருளைத் தெருளாதவுள்ளத்தவர்கவிபாடிச்சிரிப்பிப்பரே.* என்னுஞ் - செய்யுளால் இனிது விளங்கும். பொய்யடிமையில்லாத புலவர்' என்னுஞ் சொற்றொடர் மாணிக்கவாசகரைக்குறிக்குமாயின், அப்பெருமானை நன்கறிந்துள்ள நம்பியாண்டர் தமது திருவந்தாதியில், அங்ஙனங்கூறிச்செல்லலாம்; அவர் அங்ஙனங்கூறாமையின், அச்சொற்றொடர் அப்பெரியாரையே குறிக்கு மென்றுரைத்தல் சிறிதும் பொருத்தமுடைத்தன்று. அன்றியும் சுந்தர்மூர்த்திகட்கு மிகச் சமீபகாலத்துவிளங்கிய - நம்பியாண்டார்காலத்து அச்சொற்றொடர் சங்கப்புலவர்களைக்குறித்து வழங்கிவந்தமையால், அப்பெரியார் தமது திருவந்தாதியில் அங்ஙனங்கூறினாரென்க. ஆகவே, நம்மையரவர்கள். கூற்றுச் சிறிதும் பொருந்தாதென்க. (கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் 58.)