பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



134 இதன்கண் தமிழ்வாணர் தெய்வக்கலியா வாணன் என்றாங்கு சிறப்பிக்கப்படுகின்றான். திரிபுவனம் திருவிடைமருது முதலிய பெருங்கோயில்களெல்லாம் இவன் காலத்துத்தான் எழுந்தன. அறுபான் மும்மையடியார்களைக் கோயில்களில் எழுந்தருளிவித்தவன் இவனே. தமிழை வளர்த்த சோழ மன்னர்களில் இவனே பிற்காலத்தவனெனலாம். இவனுக்கு பிற்பட்ட சிற்றரசர் தமிழை வளர்த்திலர். இடைக்காலத் தமிழரசர்களில் பரணி, உலா, பிள்ளைத்தமிழ், கோவை முதலிய பிரபந்தம் பெற்றுப் புலவர்களைப் போற்றித் தமிழை வளர்த்தவர் சோழர்களே. பாண்டியர்களைவிடச் சோழர்களே பிற்காலத்துத் தமிழ் வளர்ச்சியி லீடுபட்டவ ரென்னலாம்" என்பதாம். பின், அமைச்சர் அவர்கள் விரிவுரையாளருக்கு நன்றிகூறக் கூட்டம் இனிதே நிறைவேறியது.