பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



145/ ஆசிரியரையும் தம் மாணவராகிய பிள்ளை அவர்களையும் பார்த்து 'நாம் மூவரும் இவ்வாற்றங்கரை வழியே போய்க்கொண்டிருக்கிறோம். நமது செயல் இவ்வாறு உள்ளது. ஆனால் உள்ளம் ஏதேனும் ஒன்றை எண்ணிக்கொண்டுதானே இருக்கும். உங்கள் மனம் இப்போது எதனைப் பற்றிக் கொண்டிருக்கிறது? என்று பொதுவாகக் கேட்டனர். பிள்ளை அவர்கள் :- நாளைக்கு எனக்குப் பள்ளிக்கூடம் உண்டு. ஆதலால் தஞ்சையிலிருந்து கும்பகோணத்திற்குக் காலை 9 மணிக்குப் புறப்படும் புகைவண்டியில் தவறாமல் செல்லவேண்டும். அதன்பொருட்டுப் பொழுது விடிவதற்கு இரண்டு மூன்று நாழிகைக்கு முன்னரே வலம்புரியிலுள்ள என் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிடுதல் வேண்டும்; அதற்குரிய ஏற்பாட்டை முன் இரவிலேயே செய்து வைத்தல் வேண்டும் என்ற எண்ணங்கள் என் உள்ளத்தை இப்போது பற்றிக் கொண்டிருக்கின்றன. சென்னை ஆசிரியர் அவர்கள் :- என் உள்ளம் இறைவன் திருவடியைப் பற்றிக்கொண்டு நிற்கின்றது. புறக்காரணங்கள் எவ்வேலையில் ஈடுபட்டிருந்தாலும் என் உள்ளம் மாத்திரம் இறைவன் திருவடியில்தான் பதிந்து நிற்கும். தஞ்சைப் பெரியார் அவர்கள் :- மிக நல்லது! உங்கள் நிலை பெறுதற்கரியது, இந்நிலை யாருக்கும் எளிதில் - கிட்டுவதன்று; திருவருளால் இதனை நீங்கள் பெற்றிருப்பது பற்றிப் பெரிதும் மகிழ்கின்றேன். என் உள்ளம் இப்போது எதனைப் பற்றிக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிய விரும்புவீர்கள் அல்லவா? அதனையும் சொல்லிவிடுகிறேன். இப்போது மணி ஏழுக்குமேல் இருக்கலாம். பாடங்கேட்கும் மாணவர்கள் வந்து காத்துக் கொண்டிருப்பார்களே; அரைமணிக்கு முன்னரே போயிருக்கலாமே என்ற எண்ணங்கள் என் உள்ளத்தில் ஊடாடிக் கொண்டிருக்கின்றது. - இவ்வாறு வடலாற்றின் தென்கரை வழியாக உரையாடிக் கொண்டுவந்த மூவரும் மாலைக்கடன் ஆற்றும் பொருட்டு ஒரு படித்துறையில் இறங்கினார்கள். அப்போது சென்னை ஆசிரியர் தம் கால் வழுக்கிவிட்டமையால் திடீரென்று 'அப்பாடா' என்னும் சப்தத்துடன் படித்துறையில் வீழ்ந்தனர்; அடிபடவில்லை ; ஆனால் ஆடைகள் மாத்திரம் தண்ணீரில் நனைந்து போய்விட்டன. பிறகு, அவர் எழுந்து அவற்றைப்பிழிந்து கட்டிக்கொண்டனர். பின்னர் மூவரும் திருநீறணிந்து மாலை வழிபாடு புரிந்து, வீட்டிற்குத் திரும்பினார்கள். அப்போது, தஞ்சைப் பெரியார், சென்னை ஆசிரியரையும் தம் மாணவரையும் பார்த்து, “படித்துறை நிகழ்ச்சி எனக்கு மிகுந்த