பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



148 ஊர்தோறும் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களாகிய குரு குலங்களே அன்னியர் ஆட்சியில் தாழ்ந்த நிலையிலிருந்த நம் தாய்மொழியாகிய தமிழை இயன்ற வரையில் காத்துவந்தன என்று சொல்லலாம். அவ்வாசிரியர்களுள் ஒருவரது குடும்ப நிகழ்ச்சி யொன்றை அடியிற் காணலாம். - தமிழ்நாட்டின் வடபகுதியாகவுள்ள தொண்டை மண்டலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருத்தணிகை என்னும் பேரூர் ஒன்று உளது. அது குன்றமெறிந்த குமரவேள் மலைமேல் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தலம்; திருப்புகழ் ஆசிரியராகிய - அருணகிரி நாதரால் பாடப்பெற்ற பெருமையுடையது. அது திருத்தணியல் என்று பழைய கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருப்பினும் இக்காலத்தில் திருத்தணி என்றே வழங்கப்படுகிறது. அவ்வூர், சென்னையிலிருந்து வடமேற்கே செல்லும் இருப்புப்பாதையில் அரக்கோணத்திற்கு வடக்கே எட்டுமைல் தூரத்தில் ஒரு புகைவண்டி நிலையமாக இருக்கின்றது. அதனைச் சூழ்ந்து கிழக்கே வட்திருவாலங்காடும், தெற்கே காஞ்சிமாநகரும், மேற்கே விரிஞ்சிபுரம் சோழசிங்கபுரம் என்ற ஊர்களும், வடக்கே திருப்பதி எனப்படும் திருவேங்கடமும் திருக்காளத்தியும் உள்ளன. இத்தலங்களுக்கு நடுவே முருகக் கடவுள் எழுந்தருளியுள்ள திருத்தணிகையைப் 'புவிக்குயிராகும் திருத்தணி' என்று அருணகிரியார் பாராட்டியிருத்தல் அறியத்தக்கது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த அப்பேரூரில் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரசைவ மரபில் தோன்றிய நல்லாசிரியர் ஒருவர் இருந்தனர். அப்புலவர்பிரான் கந்தப்பையர் என்னும் பெயரினர்; சிவஞான முனிவரின் முதல் மாணவரும், கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புப் பெயருடையவரும், தணிகைப்புராணத்தின் ஆசிரியருமாகிய கச்சியப்ப முனிவர்பால் - இலக்கண இலக்கியங்களைப் பயின்று சிறந்த புலமை படைத்தவர்; தணிகை அந்தாதி, தணிகைக்கலம்பகம், தணிகை உலா, தணிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் இயற்றிப் புகழ் எய்தியவர். அவர் தம் மனைவியாருடன் இல்வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த காலத்தில், மகப்பேறின்மையால் மனம் வருந்தி அவ்வம்மையாரின் தங்கையையும் மணந்துகொண்டார். மனைவியர் இருவருக்குமே பிள்ளை இல்லை. புலமைவாய்ந்த குடும்பத்தினரைப் புதல்வனில்லாக்குறை பெரிதும் வருத்தியது. எனினும், தமக்கையும் தங்கையுமாகிய இருவரும் தம் நாயகன் மனம் உவக்கும்படி தம்முள் ஒற்றுமையுடையவர்களாகவே வாழ்ந்து வந்தனர். * ஒருநாள் இருவரும் தண்ணீர் முகந்து வரும்பொருட்டுத் திருத்தணிகையிலுள்ள ஓர் ஊருணிக்குச் * பின்வரும் மகப்பேறு பற்றிய வரலாறு செவிவழிச் செய்தி கொண்டு எழுதப்பட்டது.