பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



17 உயிர்வாழ்ந்திருத்தலைக்காட்டிலும் ஒளவையைப் போன்ற நல்லிசைப் புலமை மெல்லியலார் நெடுநாளிருப்பின், தமிழகத்திற்கு மிக்க நன்மையெனக் கருதி அவருக்கு அதனை அளித்தனன் என்பதாம். இதனை, ......தொன்னிலைப் பெருமலைவிடரகத்தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனிகுறியா தாதனின்னகத்தடக்கிச் சாதனீங்கவெமக்கீந்தனையே (புறம்.91) என ஒளவையாரும், "...மால்வரைக் கமழ்பூஞ்சாரற்கவினிய நெல்லி யமிழ்துவிளைதீங் கனியௌ வைக்கீந்த வுரவுச் சினங்கனலு மொளிதிகழ் நெடுவே லரவக்கடற்றானையதிகனும்" (சிறுபாணாற்றுப்படை 99 - 103) என இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரும் கூறுதல்காண்க. அன்றியும், "இனியவுளவாகவின்னாதகூறல் - கனியிருப்பக்காய் கவர்ந்தற்று என்னும் திருக்குறள்விசேடவுரையில், ஆசிரியர் பரிமேலழகரும் இனியகனிகளென்றது ஔவையுண்ட நெல்லிக்கனிபோ லமிழ்தாவன வற்றை' என்று இச்செய்தியைக் குறித்திருக்கின்றனர். 'இவ்வரலாற்றால் இவனது வள்ளன்மை நன்கு புலப்படும். இவன் இரவலர்க்கினியனாய்ப் புரவலர்க்கின்னானாய் நின்ற பெருநிலையை ஔவையார் மிகவும் பாராட்டிக்கூறுவர். இதனை, "ஊர்க்குறுமாக்கள் வெண்கோடுகழா அலி னீர்த்துறை படியும் பெருங்களிறு போல வினியை பெருமவெமக் கேமற்றதன் றுன்னருங்கடா அம்போல வின்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே" எனவரு மினியபாடலானறிக. இப்பெருந்தகையைப் பாடிய புலவர்பெருமக்கள், ஒளவையார், பெருஞ்சித்திரனார், பொன்முடியார், பரணர் என்போர். இவர்களுள் நல்லிசைப் புலமைமெல்லியாருள் ஒருவராகிய ஔவையாரே இவ்வள்ளலது அருமை பெருமைகளை அதிகமாக வெளியிட்டவர். வேள் பாரிக்குக் கபிலர்போலவும், வேள்-ஆய்க்கு உறையூர் ஏணிச்சேறிமுட மோசியார் போலவும், சேரமான்கணைக்காலிரும்பொறைக்குப்