உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



67 (கி.பி. 1012 - 1044) திருவாலங்காட்டுச் செப்பேடுகள், வீரராசேந்திர சோழனின் (கி.பி 1063-1070) சாராலச் செப்பேடுகள் என்பன. அவற்றுள், சுந்தர சோழனுடைய அன்பிற் செப்பேடுகளே மிக்க தொன்மை வாய்ந்தவையாகும். பல ஆண்டுகளாகத் தமிழ்த் தாய்க்கு அருந்தொண்டுகள் ஆற்றிவரும் நம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கிடைத்துள்ள செப்பேடுகளின் தொகுதி, முதல் இராசராச சோழனுடைய அருமைப் புதல்வனும் கி.பி. 1012 முதல் 1044 வரையில் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து சோழர் பேரரசை யாண்டும் பரப்பி கங்கைகொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயருடன் அரசாண்டவனும் ஆகிய முதல் இராசேந்திர சோழன் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி.பி. 1020ல் அளித்ததாகும். எனவே, இஃது ஏறத்தாழத் தொள்ளாயிரத்து முப்பத்தேழு ஆண்டுகட்கு முன்னர் வரையப்பெற்றதாதல் வேண்டும். இதனால் பண்டைச் சோழமன்னர்களின் வரலாற்றையும், முதல் இராசேந்திர சோழனுடைய வீரச்செயல்களையும், பெருங்கொடைத் திறத்தையும், சோழர்களின் அரசியல் முறைகளையும், பதினொன்றாம் நூற்றாண்டில் நிலவிய ஊர்கள் ஆறுகள் கால்வாய்கள் முதலானவற்றின் உண்மைப் பெயர்களையும், அக்கால வழக்கங்களையும் மற்றும் பல அரிய செய்திகளையும் இதனால் நன்கறிந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட நான்கு செப்பேடுகளிலும் காணப்படாத சில அரிய வரலாற்றுச் செய்திகள் இதில் சொல்லப்பட்டிருத்தல் உணரற்பாலதாகும். இத்தொகுதி ஐம்பத்தைந்து செப்பேடுகளையுடையது. இது வலிமையுள்ள செப்பு வளையத்தில் கோக்கப்பெற்றிருப்பதோடு தாமரைப்பூ வடிவில் அமைந்த பீடத்தின்மேல் முதல் இராசேந்திர சோழனுடைய வட்ட வடிவமான அரசாங்க முத்திரையையும் உடையது; வடமொழிப்பகுதி, தமிழ்ப் பகுதியாகிய இரண்டு பகுதிகளைத் தன்னகத்துக்கொண்டது. இவற்றுள், முதலிலுள்ள வடமொழிப் பகுதி மிகச் சுருங்கியதும் அதன் பின்னுள்ள தமிழ்ப் பகுதி மிக விரிந்ததுமாகும். வடமொழிச் செப்பேடுகள் மூன்றுள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றும் 16 1/2 அங்குல நீளமும் 9 1/2 அங்குல அகலமும் உடையது. எஞ்சிய தமிழ்ச் செப்பேடுகள் ஐம்பத்திரண்டினுள் முதல் இருபத்தொன்று 16 1/2 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் உடையன; மற்றச் செப்பேடுகள் நீளத்திலும் அகலத்திலும் சிறிது குறைந்துள்ளன. இது, முதல் இராசேந்திர சோழன் கி.பி. 1020ல் சோழ மண்டலத்தில் ஐம்பத்தோர் ஊர்களைத் திரிபுவன மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற