பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 95 வரட்டுமா அத்தே... வரட்டுமா தம்பி!' கார் ஸ்டார்ட்டாகியது. இப்போது முன் nட்டில் உட்கார்ந்துகொண்ட மோகினி, அந்த வீட்டை ஏற இறங்கப் பார்த்தாள். பழைய காலத்து வீடானாலும் கெட்டியாக இருந்தது. மாடியில் யாரோ வாடகைக்கு இருக்கிறார்கள். கிழவி மேக்கப்' செய்துகொள்வதுபோல் பழைய காலத்தை நவீனப்படுத்தும் வகையில் வீட்டின் வெளிச்சுவரில் சுண்ணாம்பு வெள்ளை நீக்கப்பட்டு டிஸ்டம்பர் அடிக்கப்பட்டிருந்தது. வாசற்கதவும் மாற்றப் பட்டதுபோல் தோன்றியது. அந்த வீட்டை மனதுக்குள் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு, மோகினி முன் nட்டில் சீனிவாசனுக்கு அருகே உட்கார்ந்தாள். சீனன் கொடுத்துவச்சவன்' என்று சபாபதி சொல்வது அவளுக்குக் கேட்டது. அதற்குக் கமலா வும் உஷாவும் தலையாட்டுவதும் அவள் பார்வையில் பட்டது. டாடா”, சீரியோக்களுடனும் உறுமலோடும் புறப் பட்ட கார், மெளனமாக இயங்கிக்கொண்டிருந்தது. கண் இமைகளைக் கொட்டாமலே, ஒங்களவங்களுக்கு என்னப் பிடிச்சிருக்குமுன்னு நினைக்கிறேன்' என்றாள் மோகினி. விஷயம் வேற மாதிரி. ஒனக்கு அவங்களப் பிடிச் சிருக்கா என்பதுதான் கேள்வி.’’ என்னங்க நீங்க, ஒங்கப்பா எங்கப்பா இல்லியா? ஒங்கம்மா எங்கம்மா இல்லியா?" சீனிவாசனால் உணர்ச்சிப் பெருக்கில் பேச முடிய வில்லை. கார் கண்ணாடியில் நடந்தவைகளுக்கெல்லாம் உருவங் கொடுத்துப் பார்த்தான். அதில் பின்னால் வரும் வண்டிகளுக்குப் பதிலாக, அவனும் அவளும் உலவிக்கொண் டிருந்தார்கள்.