பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 1 1 Ꮥ மாற்றான்' குரங்கிடமிருந்து, தன் கருவைக் காப்பதற்கு, காதல் விளையாட்டுக்கு இடங்கொடுக்காமலே, காதல் செய்வதுபோல் நடிக்கும் பெண் குரங்கின் பார்வை அது. தான் போட்ட குட்டிகளைத் தின்ன வரும் ஆண் புலியைக் கடித்துக் குதறத் தயாராக இருக்கும் பெண் வேங்கையின் பார்வை அது. 4 ஐந்தாறு டெலெக்ஸ் செய்திகளைப் பப்ளிவிட்டி மானேஜர் பார்ப்பதற்காக அவர் முன்னால் வைத்துவிட்டு பின்னர் மின்விசிறியில் சிதறிய அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு, அதன்மேல் ஒரு புேப்பர் வெயிட்டையும் போட்டுவிட்டு, எதிரே உள்ள நாற்காலியில் உட்கார்ந்தாள் மோகினி. மானேஜர் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, பின்னர் தன் உருவம் மிகச் சிறிய அளவில் அவள் வலது கண்ணில் பிரதிபலிப்பதை ரசித்துக்கொண்டே இருந்த போது, எடிட் பண்ணிக்கொடுங்க ஸார்...ஹேண்ட் அவுட் பிரபேர் பண்றேன்' என்றாள். அது அவள் வேலை பார்க்கும் நிறுவனம். பாரதத்தின் மிகப் பெரிய கம்பெனிகளில் ஒன்று. அரசாங்க நிறுவனங் களுக்கும், இதர தொழில் நிறுவனங்களுக்கும், பாய்லர்கள், டெலிபோன் கருவிகள், யந்திரங்கள், மின்சார சாதனங்கள், பெட்ரோல் ரசாயன சுத் திகரிப்பிற்கான பிரம்மாண்டமான கருவிகள். பால் பண்ணைகளுக்குத் தேவையான டெயரி: யந்திரங்கள் முதலியவற்றைக் குறித்த தேதிக்குள் குறித்த முறைகளில் செய்து கொடுக்கும் கம்பெனி அது. அல்ஜீரியா, டுனிவியா, லிபியா போன்ற நாடுகளில் டெண்டர்கள் ச.-8