பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் ",கொடுக்கவும் வேண்டாம். என் டைப்பிஸ்ட் பதவியை கெடுக்கவும் வேண்டாம். சரி நான் புறப்படட்டுமா..." ஒங்களைக் கடவுளாலயும் திருத்த முடியாது!" கடவுளே இப்போ திருத்தத்துக்கு உரியவராகிறார்! " அப்போ... அம்பத்துர் பேக்டரியை...” நிச்சயம் ஏற்றுக்க மாட்டேன்! நீயே, ஏன் ஏற்றுக்கக் கூடாது?’’

  • நான் பெண்ணாய் பிறந்து தொலைச்சுட்டேனே...'

இந்த நாட்டோட பிரதமரே பெண்தான்!' ஒங்க மனசுல என்னதான் நெனப்பு...”* - பானு கண்ணு... என்னை என் வழில விடுப்பா. நான் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒன்னைக் கட்டல. பேக்டரி நிர்வாகத்தை ஏற்றுக்கிட்டால், அப்புறம் என் பானு கண்ணுகிட்டே பேசக்கூட டயம் கிடைக்காது. என் வாழ்க்கை, பேக்டரி நிர்வாகத்தோட பெரிது. அந்தப் பெரிய வாழ்க்கையைவிட, என் பானு டார்லிங் ரொம்ப பெரிசு. மகிழ்ச்சியை விலையாய்க் கொடுத்து, பொறுப்பை எடுத்துக்க நான் தயாராய் இல்ல. தயவுசெய்து என்னை வற்புறுத்தாதே மேடம்!' பானு, அவனிடம் கோபமாக ஏதோ சோல்லப்போன போது, முத்தம்மா வந்தாள், என்ன முத்தம்மா!" பாஸ்கரன் அய்யா என்னை வேலையில் இருந்து நிற்கச் சொல்லிட்டார். ' ஒன்னையா... எதுக்காம்?" அதுக்கான காரணத்தைச் சொன்னால், என்னை ராமாயண கூனியாய் நினைப்பாங்க. அவருக்கு என்மேல ஆயிரம் சங்கடம். நிறுத்திட்டார். அம்மாகிட்டேயும் சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்.'