பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - #13

வந்தார். “இந்தா, தங்கச்சி! நல்லாப் பார்த்துக்க. நீயே ஹோட்டல் பையன்கிட்டச் சொல்லிக் காப்பி வரவழைச்சு உன் கையாலேயே கொடு. நாளைக்காலையிலே தம்பி நம்மோட காப்பி குடிக்க இங்கே இருக்கும்னு நேற்றுச் சொன்னேன். சொன்னபடி தேடிக் கொண்டாந்தாச்சு...” என்றார் அண்ணாச்சி. பாண்டியனைப் பார்த்த மகிழ்ச்சி இருந்தாலும் அவள் உள்ளே வேறு ஏதோ ஒரு கவலை சுரந்திருப்பது அவளுடைய முகத்தில் தெரிந்தது. அந்த வசீகரமான முகத்தில் வழக்கமான ஒளி இல்லை.

“நீங்கள் எல்லாம் இருந்துமா இப்படி நடந்தது?” என்று மணவாளனைக் கேட்டாள் அவள்.

“நான் எவ்வளவோ எச்சரித்திருந்தும் பாண்டியன் ஏமாந்துவிட்டான். என்ன செய்வது? இனிமேல் ஜாக்கிர தையாக இருப்பான் என்று நினைக்கிறேன்” என்றார் மண வாளன். பேசிக்கொண்டே இருந்தவள் திடீரென்று நாலாக மடிக்கப்பட்ட ஒரு துண்டுத்தாளை எடுத்துப் பாண்டி யனிடம் நீட்டி, “நான் நீங்கள் வெற்றி பெறப் பாடுபடு கிறேனாம். அதனால் என்னையும் உங்களையும் பற்றி எதிரிகள் இப்படியெல்லாம் தாறுமாறாக நோட்டீஸ் அடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்று கூறும் போதே அவள் குரல் கரகரத்துத் தொண்டை கம்மியது. கண்கள் கலங்கிவிட்டது.

சிறிதும் பதறாமல் பாண்டியன் அந்த நோட்டிஸை வாங்கிப் படித்தான். குறிப்பறிந்து அண்ணாச்சியிடம் ஏதோ தனியே பேச வெளியேறுவது போல் மணவாளன் அறையிலிருந்து வராந்தாவின் பக்கமாக வெளியேறிச் சென்றார். அந்த நோட்டீஸைப் பாண்டியன் பார்த்தால் தன் மேல் அவனுக்கு இருக்கும் பிரியமே போய்விடுமோ என்றுதான் பயந்தாள் கண்ணுக்கினியாள். ஆனால், பாண்டியனோ அதைப் படித்துவிட்டுச் சிரித்தான். பின்பு சொன்னான்:

“இப்படி ஆயிரம் நோட்டீஸ் அடித்துக் கொடுத் தாலும் என் மனத்தில் உன்மேலுள்ள அன்பு போகாது!

ச.வெ-8