பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சத்திய வெள்ளம்

செய்தார்கள். போலீஸ் நிலையத்தில் யாரோ கான்ஸ்டபிள் ஃபோனை எடுத்துப் பேசினார். இன்ஸ்பெக்டருக்காவது வட்டாரப் பெரிய போலீஸ் அதிகாரிக்காவது ஃபோன் செய்யச் சொல்லி யோசனை கூறினார் அவர். இன்ஸ் பெக்டருடைய வீட்டு நம்பருக்கு முயன்று தொடர்பு கொண்டபோது அவர் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையே சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல், ‘யூனிவர்ஸிடி விவகாரமானால் வி.சி. ஃபோன் செய்யாமல் நாங்கள் தலையிட முடியாது’ என்று வைத்துவிட்டார். துணைவேந்தருக்கு ஃபோன் செய்தபோது அவர் வீட்டில் ஃபோனே எடுக்கப்படவில்லை. நாலைந்து மாணவர்கள் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸுக்கு விரைந்து பேராசிரியர் பூதலிங்கத்தை எழுப்பி இந்த விவரங்களை எல்லாம் சொன்னார்கள். அவர் அநுதாபத்தோடு பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பின்பு பதில் சொன்னார்.

“எதையாவது கலகம் செய்து பேரவைத் தேர்தல்களை நிறுத்திவிடுவதுதான் அவர்கள் திட்டமாயிருக்கும். எப்படி யாவது முயன்று தேர்தல்கள் நடந்து முடியும்படியாகச் சுமுகமானச் சூழநிலையை நீடிக்கச் செய்யுங்கள். அது முக்கியம்” என்று அறிவுரை கூறியனுப்பினார் பூதலிங்கம். மாணவர்கள் ஏற்கெனவே முதலில் திட்டமிட்டபடி அந்த வெடவெடக்கும் குளிரில் தெற்கு வாசல் வழியாக வெளியேறி ஒரிடத்தில் தங்கிக் கொண்டு ஆளனுப்பி அண் ணாச்சியையும், மணவாளனையும் எழுப்பிக் கொண்டு வரச் செய்தனர். அவர்கள் எழுந்து வந்தபின் அவர்களை யும் கலந்து பேசிக்கொண்டு அந்த லாரிகளை மடக்குவது என்ற முடிவுடன் புறப்பட்டனர். நூறு நூறு மாணவர் களாகப் பிரிந்து நான்கு பக்கமிருந்து வளைக்கவே மூன்று லாரிகளிலுமிருந்து அறுபதுக்கு மேற்பட்ட குண்டர்கள் மாணவர்களை நோக்கிச் சோடாபுட்டி வீச்சிலும் கல்லெறி யிலும் இறங்கினர். சிறிது நேரத்தில் கல்லெறியையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் லாரிகளை நெருங்கி