பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 137

இடங்களுக்கு நெருப்பு வைக்கவும் தம்முடைய லாரிகளில் பயங்கர ஆயுதங்களையும் கிரோஸின் டின்களையும் நிரப் பிக் கொண்டு சென்றதாகக் கயிறு திரித்து அந்தப் பழியை யும் மாணவர்கள் தலையிலேயே சுமத்தப் பார்த்திருந்தார் இராவணசாமி. தேர்தல் அமைதியாக நடந்து கொண்டிருக் கிறது என்ற செய்தியே அவருக்கும் கோட்டம் குருசாமிக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாயிருந்தது. பதினொன்றரை மணிக்குள் கலைப் பிரிவு, நுண்கலைப் பிரிவு, ஆசிரியர் பயிற்சி, கீழ்த்திசைப் பட்டப் பிரிவு ஆகிய துறைகளைச் சேர்ந்த எல்லா மாணவர்களும் வோட்டளித்து முடிந்து விட்டது. சிறிது தொலைவு விலகியிருந்த மருத்துவக் கல்லூரி, பொறியியற் பிரிவு, வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்தான் இன்னும் வோட்டளிக்க மீதம் இருந்தனர். கியூவில் அவர்கள் வரிசைதான் நீண்டிருந்தது. அதுவரை அலுவலகத்துக்கு வராமலிருந்த துணைவேந்தர் அப்போது தான் அலுவலகத்துக்கு வந்தார். அவர் வீட்டிலிருந்து புறப்படுமுன் பண்புச் செழியன் வந்து முதல் நாளிரவு தம்மை மாணவர்கள் சிரமப்படுத்தியது பற்றிப் புகார் செய்திருந்தார். அது போதாதென்று காலை பத்தரை மணிக்கே துணைவேந்தரின் வீட்டுக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு மூன்று முறை தென்மணி லாரி விஷயமாக ஃபோன் செய்து பல்கலைக் கழக எல்லைக்குள் வர அநுமதி கேட்டுவிட்டார். ஆனாலும் துணைவேந்தர் எதற்கும் பிடி கொடுக்கவில்லை; பயந்தார்.

“ஸ்டுடன்ட் கவுன்ஸில் தேர்தல்கள் நடந்து கொண்டி ருக்கின்றன. பல்கலைக் கழக மைதானத்தில் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கிறார்கள். இப்போது நீங்கள் உள்ளே நுழைந்தால் வீண் கலகம் வரும். அன்று கல்லெறி சம்பந்தமாகத் தேடிக் கொண்டு இங்கே மாணவர்களை அரஸ்ட் செய்ய உள்ளே வருவதற்கு உங்களை அநுமதித்த தற்கே மாணவர்கள் என்மேல் கடுங் கோபத்தோடிருக் கிறார்கள். இன்றும் நீங்கள் உள்ளே வந்தீர்களானால் அதனால் கலகம்தான் மூளும். எதற்கும் நான் போய்ப்