பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 185

மிகவும் அபாயகரமான நரிகள் இன்று நாட்டில்தான் இருக்கின்றன. அந்த நாட்டு நரிகளுக்குப் பயப்படுவதை விட அதிகமாக நீங்கள் இந்தக் காட்டு நரிகளுக்குப் பயப்பட வேண்டியதில்லை” என்று பிச்சைமுத்து நகைத்துக் கொண்டே சொன்னார்.

அவர்கள் இருவரும் வாழைத் தோட்டத்தின் கிணற்ற டியை அடைந்தபோது வானில் மேகங்களிலிருந்து விலகி விடுபட்ட நிலா உச்சிக்கு வந்திருந்தது. பிச்சைமுத்துதான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கிணற்றின் அருகே இருந்த மோட்டார் ரூம் கதவை மெல்லத் தட்டினார். உள்ளே யிருந்து திருமதி சற்குணத்தின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அழுகுரலிலிருந்து அத்தனை அகாலத்திலும் சற்குணம் தம்பதிகள் தூங்கவில்லை என்று தெரிந்தது. கதவைத் திறந்த சற்குணம் பிச்சைமுத்துவை உடனே அடையாளம் புரிந்து கொண்டு,

“யாரு பிச்சைமுத்துவா? எப்படி வந்தே இங்கே?. என் மகளைக் கொன்னுட்டாங்கப்பா. பாவிப் பயல்கள்” என்று குரல் தழுதழுக்க ஆரம்பித்தவர் பக்கத்தில் இன்னும் யாரோ நிற்பதைப் பார்த்துப் பேச்சை உடனே நிறுத்திக் கொண்டுவிட்டார்.

“இது யாரு உன் கூட.” “எல்லாம் நமக்கு வேண்டியவர்கள்தான். உள்ளே போய்ப் பேசலாம்’ - என்று கதிரேசனையும் உள்ளே அழைத்துக் கொண்டு தாமே கதவை உட்புறமாகத் தாழிட்டார். பிச்சை முத்து.

தண்ணிர் இறைக்கும் மின்சார மோட்டாரும், கிரீஸ், மண்ணெண்ணெய் வாடையுமாக அந்த அறை தூசி மயமாய் இருந்தது. அறையின் ஒரு மூலையில் திருமதி சற்குணம் தலைவிரி கோலமாக விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள். “டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து வந்திருக் காரு” என்று அவளருகே போய்க் குரல் கொடுத்தார் சற்குணம். ஒருகணம் நிமிர்ந்து நோக்கிய அந்த அம்மாளின் முகத்தைப் பார்த்ததுமே மேரி தங்கத்தின் இலட்சணமான