பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 33;

வழியாக வெளியேறலாமா என்றுகூட நினைத்தார். இருட்டிய பின்னும் மாணவர்கள் விடவில்லை. மாலையில் மேலும் மாணவர்கள் அதிகமான அளவு வந்து சேர்ந்து கொண்ட தால் பங்களா காம்பவுண்டில் கூட்டம் முன்னைவிட உணர்ச்சிவசப்பட்டு பஸ்ஸுக்கு நெருப்பு வைத்து விடுமோ என்று கூடத் தாமாகவே கற்பனை செய்து பயந்து நடுங்கினார் அவர்.

★ ★ 女

மாலை ஆறரை மணிக்கு நுண்கலைப்பிரிவின் அரங்கில் குறவஞ்சி நாடகத்துக்காக மேக்அப் போட்டுக் கொள்ளப் போகிறவரை பாண்டியனை எதிர்பார்த்துக் காத்திருந்த கண்ணுக்கினியாளுக்கு அவன் வராதது ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்தது. அவள் கிரீன் ரூமில் இருந்தபோது சகமாணவி ஒருத்தி வந்து நிலையைத் தெரிவித்தாள். பக்கத்தில் கதகளி ஆட்கள் வேறு நின்று கொண்டிருந்தார்கள். அவள் மனம் நாடகத்தில் லயிக்கவே இல்லை. முதலில் அவளது குறவஞ்சி நாடகம்தான் நடக்க வேண்டியிருந்தது. மாணவர்களும், பாண்டியனும் மல்லை இராவணசாமி விட்டில் மறியலில் இருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்ததும் அவள் நிம்மதி இழந்திருந்தது. அவளால் நிறைவாக நடிக்க முடியவில்லை. பத்து நிமிஷம் மேடையில் தோன்றி ஆடிப்பாடிக் குறி சொல்லிக் குறத்தி யாக நடித்தாள். அப்புறமும் உடனே அங்கிருந்து கத்திரித்துக் கொண்டு புறப்பட முடியவில்லை. அவளுடைய நாடகக் கலைப்பிரிவுப் பேராசிரியர் கருணாகரமேனோன்தான் இதற்கு ஏற்பாடு செய்தவர். அவர் முன்னிலையில் குறவஞ்சி நாடகம் முடிந்ததும், கதகளியைப் பார்க்காமல் அவள் வெளியேறுவது என்பது முடியாமல் இருந்தது. மேக் அப்பைக் கலைத்துவிட்டு வழக்கமான கோலத்தோடு முன் வரிசையில் அமர்ந்து கதகளி முடிகிறவரை அங்கே இருந்து பார்த்தாள் அவள். வகுப்பின் பாடங்களில் ‘தென்னிந்திய நாடகங்கள் - தொடக்க நிலை என்ற பிரிவின் கீழ் நடை முறைப்பாடமாக இந்தக் குறவஞ்சியும், கதகளியும் ஏற்பாடு