பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 சத்திய வெள்ளம்

“ஆனா அவர் ரொம்ப மோசமான ஆளுதான். யூனியன் கீனியன்னு புறப்பட்டு வேலை செஞ்ச தொழிலாளி களையெல்லாம் காதும் காதும் வெச்சாப்பிலே ஆள் ஏவித் தீர்த்துக் கட்டியிருக்காரு தேயிலைக் கொழுந்து பறிக்க வார பொம்பிளைகளிலே சின்னஞ்சிறுசுகளைப் படாத பாடுபடுத்தியிருக்காரு. ஆனாலும்..?”

“நியாயமும், தீர்ப்பளிக்கும் பொறுப்பும் தங்கள் கைகளில் இருப்பதாகக் கதிரேசன் குழுவினர் தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது.”

- இதற்குள் செய்தி விடுதியில் மற்ற அறைகளுக்குப் பரவிவிடவே அண்ணாச்சி, பாண்டியன், பொன்னையா ஆகியவர்களை மற்ற அறைகளின் மாணவர்கள் வந்து சூழ்ந்து மொய்த்துக் கொண்டுவிட்டார்கள்.

“கதிரேசன் முதலியவர்கள் செய்ததில் தவறு என்ன? தீயவர்கள் அழியவேண்டியதுதானே நியாயம்?” என்று கேட்டான் ஒரு மாணவன்.

“நம்முடைய சமூக நியாயங்களைக் காப்பாற்றும் முறைகளும் நியாயமானவையாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். முறைகேடான வழியில் போய் முறை களைக் காப்பாற்ற முடியாது. ஒரு சத்தியாக்கிரகிக்குத் தன்னைக் கொன்று போட்டாலும் பொறுத்துக்கொள்ளும் மனோதிடமும் பொறுமையும் வேண்டும் என்கிறார் காந்தி” என்று பண்டியன் அவனுக்கு மறுமொழி கூறினான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின் மற்ற விடுதி அறைகளுக்கும், வாடிக்கைகாரர்களான விரிவுரை யாளர்கள் பேராசிரியர்கள் வீடுகளுக்கும் தினசரிகள், சஞ்சிகைகளைப் போட்டுவிட்டுக் கடைக்குத் திரும்பினார் அண்ணாச்சி. மனம் கவலையில் ஆழ்ந்து எந்த வேலை யிலும் லயிக்காமல் இருந்தார் அவர். கதிரேசன் இப்படி வேகமாக மாறுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய வாலிபத்தில் காந்தி என்ற பேரொளி தன்னை மாற்றி பண்படுத்தியது போல் அல்லாமல்,