பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 சத்திய வெள்ளம்

பாலவநத்தத்தில் தந்தி கிடைத்து அவசரம் அவசர மாக மதுரை வந்து மணவாளனின் வீட்டில் போய் விசாரித்து அவர் இரவே வாடகைக் காரில் மல்லிகைப் பந்தலுக்கு விரைந்திருப்பதை அறிந்து கொண்டு கண்ணுக் கினியாளுக்குத் தகவல்தெரியுமோ தெரியாதோ என்ற சந்தேகத்துடனேயே பஸ் நிலையத்துக்கு வந்த பாண்டியன், அங்கு கண்ணுக்கினியாளே வழியனுப்ப தந்தை சகிதம் மல்லிகைப்பந்தல் பஸ் அருகே தயாராக நின்று கொண்டி ருப்பதைக் கண்டு அவன் ஆச்சரியம் அடைந்தான். அவளும் எதிர்பாராதவிதமாக அவனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாள். ‘தெரியுமா? அண்ணாச்சியை... என்று அவள் தொடங்கிய வாக்கியத்தை, “தெரியும், தந்தி வந்து தான் நான் உடனே புறப்பட்டேன். உனக்கு எப்படித் தெரியும்?” என்று பதில் கேள்வியால் அவளை எதிர் கொண்டான் பாண்டியன்.

“எனக்கும் தந்தி வந்தது. உடனே மணவாளன் அண்ணன் வீட்டுக்கு நாயினா ஆள் அனுப்பி விசாரிச்சுக் கிட்டு வரச் சொன்னாரு அவரு ராத்திரியே புறப்பட்டுப் போயிட்டாருன்னு தெரிஞ்சுது” என்றாள் அவள்.

“ஒரு தப்புத் தண்டாவுக்குப் போகமாட்டானே; அவனைப் போலீஸ் பிடிச்சிருக்குன்னா ஆச்சரியம்னு சொல்றதா, அக்கிரமம்னு சொல்றதா?” என்பதாகப் பாண்டியனிடம் அண்ணாச்சி கைதானது பற்றி வருத்தப் பட்டார் கந்தசாமி நாயுடு.

“நானே கூடப் புறப்பட்டுப் போகலாம்னு இருந்தேன். நல்ல வேளையா நீ வந்திட்டே தம்பீ...” என்று கூறிக் கண்ணுக்கினியாளையும் அவனோடு பஸ் ஏற்றி அனுப்பி னார் நாயுடு. அவர்கள் பஸ் மதுரையிலிருந்து புறப்படும் போதே பகல் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. பஸ்ஸில் போகும்போது, தன்னை வழிப்படுத்தி மயக்க, ஊருக்கு வந்த மல்லை இராவணசாமி கட்சியைச் சேர்ந்த சென்னைப் பிரமுகர் பற்றி அவளிடம் கூறினான் பாண்டியன், “ஏன் இப்பிடி நாயா அலையிறாங்க..?’ என்று கேட்டாள் அவள்.