பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி &#5

பெண்கள் விடுதிக்கு முன்னிருந்த பூங்காவில் சிரிப்பொலி

யும், வளை ஒலியும், பேச்சுக்களுமாக நிறைய மாணவிகள் தென்படுவார்கள். சிலர் மாணவர்களோடு தனியே பேசிக் கொண்டிருப்பார்கள். புல்வெளிகளின் பிற பகுதிகளிலும், நீச்சல் குளத்தருகிலும்கூட மாணவர்கள் கூட்டம் கூட்ட மாகவும், இருவர் மூவராகவும், தனியாகவும் காணப்படு வார்கள். அன்று அத்தனையிலும் ஒரு மாறுதல் தெரிந்தது. மரங்களும், பூங்காக்களும், புல்வெளியும், கட்டிடங் களும் மஞ்சு சூழ்ந்து மங்கித் தெரிந்தன. மஞ்சு படிந்து மங் கிய மலைச் சரிவில் மின் விளக்குகள்கூடத் தளர்ந்து உறங் குவனபோல் தோன்றின. சில பெரிய மரங்களின் கீழே விளக்குக் கம்பத்தடியில் அமர்ந்து கருமமே கண்ணாகப் படிக்கும் மாணவர்களைக்கூட இன்று காணவில்லை. போட்ஹவுஸ் அருகேகூட வெறிச்சிட்டுக்கிடந்தது.

“அண்ணாச்சி சொன்னது சரிதான்! நிலைமை ஒரு தினுசாகவே இருக்கிறது.” என்று பாண்டியன் மோகன் தாஸிடம் சொன்னான். இருவரும் அறைக்குப் போய் விட்டுத்தான் உணவு விடுதிக்குச் சென்றார்கள். .

அங்கே உணவு விடுதியிலும் அதே சூழ்நிலை நிலவியது. பல மாணவர்கள் தாங்கள் கேள்விப்பட்டதைத் தனியாகவும் கூட்டமாகவும் சிறுசிறு குழுக்களாகவும் பாண்டியனிடம் வந்து தெரிவித்தனர். திரும்பும்போது மெஸ் வாயில் வரையிலும் பல மாணவர்கள் சுற்றிச்சுற்றி நின்று பேசிக் கொண்டு வந்தார்கள்.

மீண்டும் பாண்டியன் அறைக்குத் திரும்பும்போது இரவு மணி எட்டரைக்கு மேலாகியிருந்தது. முன்பே உணவு விடுதியிலிருந்து திரும்பியிருந்த அறை நண்பன் பொன்னையா, “உங்களுக்கு ரெண்டு மூன்று தடவை ஃபோன் வந்தது. லேடிஸ் ஹாஸ்டலிலிருந்து யாரோ கூப் பிட்டார்கள். மறுபடியும் கூப்பிடச் சொல்லியிருக்கிறேன்” என்று பாண்டியனிடம் தெரிவித்தான் வேறு அறை மாணவன் யாராவது ஃபோனை எடுத்துத் தன்னை வந்து கூப்பிடும்படி விடவேண்டாம்’ என்று ஹாஸ்டல் மாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/47&oldid=608940" இலிருந்து மீள்விக்கப்பட்டது