பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 481

வேண்டியதுதான். இல்லாட்டி நாளைக்கி நம்மைச் சட்னியாக்கிடுவாங்க” என்றார் தங்கத்துரை. பாண்டியன் தயங்கினான்.

“மாணவர்களுக்காக நாம் நடத்தற போராட்டத்திலே பத்து மாணவர்கள் அடிபட்டு இரத்தம் சிந்தற மாதிரி நாமே துரண்டி விடப்பிடாது! கூடியவரை அமைதியாகப் போறதுதான் நல்லது. இன்டிஸிப்ளினா இருக்கிற ஒரு சர்க் காரை எதிர்க்க நமக்கு வேண்டிய தார்மீக பலம் நாமாவது டிஸிப்பிளினா இருந்து போராட்டம் நடத்தறோம் கிறதுதான். அது மிகமிக முக்கியம்” என்று பாண்டியன் கூறியதைக் கேட்டு தங்கத்துரை முகத்தைச் சுளித்தார்.

“நீ அமைதியா இருந்தாலும் அவங்க உதைக்கத்தானே போறாங்கன்னு இவர் சொல்றதிலே இருக்கிற பாயிண்டைக் கவனி பாண்டியன் ” என்று அறை நண்பன் பொன்னை யாவே தங்கத்துரைக்குப் பரிந்து பேசினான். வேறொரு மாணவனும் அதே கருத்தைச் சொன்னான் தங்களோடு சேர்ந்திருந்தாலும் லெனின் தங்கத்துரை பிரிவினரும், கதிரேசனால் உருவாக்கி விடப்பட்ட ஒரு பிரிவனரும், பல தீவிர எதிர்ப்புகளுக்குத் தனியே திட்டமிடுவதாகப் பாண்டியன் ரகசியமாகக் கேள்விப் பட்டிருந்தான். என்ன செய்வதென்று பாண்டியன் யோசித்துக் கொண்டிருந்த போது அண்ணாச்சி கடைக்குக் கடிதம் எடுத்துச் சென்ற பையன் திரும்பி வந்தான். பாண்டியன் அனுப்பிய கடிதத்திலேயே பின் பக்கம் மணவாளன் இரண்டே வாக்கியங்களைச் சுருக்கமான பதிலாக எழுதியிருந்தார்.

“உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக எதுவும் செய்ய வேண்டாம். பொறுமையாக இரு, விடியட்டும்.” இந்தப் பதிலைத் தங்கத்துரையிடம் பாண்டியன் காண்பித்ததும், அவர் “பொறுமையைக் கொண்டு போய் உடைப்பிலே போடுங்கள்! பொறுமையாகயிருந்தால் விடியவே விடியாது” என்று கோபமாகக் கூறிவிட்டுத் தம் நண்பர் களுடன் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

.ச.வெ-31