பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 சத்திய வெள்ளம்

சொல்லி அந்த யூனிவர்ஸிடி வாட்டர்பாய் எச்சரித்துவிட்டுப் போயிருந்ததை நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. எதற்கும் இருக்கட்டும் என்று எதிர் வரிசையிலிருந்த மருந்துக் கடைக்குப்போய், போலீசுக்கும் அண்ணாச்சி ஃபோன் செய்துவிட்டு வந்தார். ஃபோனில் எதிர்ப்புறம் கிடைத்த பதிலிலிருந்து போலீஸ் உதவி கிடைக்கும் என்று தோன்றவில்லை.

அண்ணாச்சி அவசரம் அவசரமாக ஹோட்டலுக்குப் பையனை அனுப்பி இரவு உணவுக்கு இட்டிலி வாங்கி வரச் சொல்லி வைத்துக்கொண்டார். அப்புறம் முடியுமோ முடியாதோ என்னும் எண்ணத்தில் பாண்டியனுக்கும் கண்ணுக்கினியாளுக்கும் தமக்கும் பயன்படும் என்ற நோக்கத்தோடு முன் ஜாக்கிரதையாக இதைச் செய்திருந் தார் அவர். கடையடைக்கும் முன் சாமி படங்களுக்குச் சூட்டியது போக மீதமிருந்த மல்லிகைப் பூவை உட்புறமாக நீட்டி, “இந்தா தங்கச்சி! தலைக்கு வைச்சுக்க” என்று கண்ணுக்கினியாளிடம் கொடுத்தார் அண்ணாச்சி.

மெல்ல மெல்லக் கடை வீதி ஆளரவம் அடங்கி மேலும் இருளத் தொடங்கியது. பதற்றத்தினாலும் பயத் தினாலும் ஊர் இருந்த நிலைமைக்கு நடுங்கியும் கடை வீதியில் பலர் முன்னதாகவே கூடக் கடைகளை அடைத் துக் கொண்டு போயிருந்தார்கள். மணவாளனிடம் சொல்லி அனுப்பியிருந்ததனால் தொழிலாளர் யூனியனிலிருந்து ஐம்பது அறுபது பேரை அவர் அனுப்பிவிட்டுப் போவார் என்று எதிர்பார்த்தார் அண்ணாச்சி. ஆனால் அப்படி யாரும் உதவிக்கு வரவில்லை.

லாரிகளிலும், வேன்களிலும் ஏற்றி, மாணவர்களை ஊர் எல்லையில் ஐந்து மைல், பத்து மைல் தள்ளி இறக்கி விட்டுவிட்டு வந்த போலீஸ் கொடுமையினால் மாணவர் கள் கடைப்பக்கம் வரவில்லை. அவசர அவசரமாகப் பாண்டியனையும் கண்ணுக்கினியாளையும் ஏதாவது ஒரு நண்பர் வீட்டுக்கு அனுப்பி அங்கே இரகசியமாக இருக்கும் படி செய்து பாதுகாக்கலாமோ என்று அண்ணாச்சிக் குத் தோன்றியது. ஆனால் அப்படிச் செய்வதிலும் ஓர்