பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அறிஞர் அண்ணா


இல்லை. இன்னொரு அத்தை. கரப்பா நெட்டையா இருப்பாள். காமுண்ணு பெயர். அவ ஆத்துக்காரருக்கு ரங்குபட்டர் நேர் தம்பிங்காணும்.

கேசவப் : அப்படிச் சொல்லும் ஓய்! ஒரு நாள் ரங்குபட்டர் தூக்கத்திலே பிதற்ற ஆரம்பித்தார். காமு, காமுண்ணு கூவிக்கிட்டிருந்தார். கங்குபட்டர் கூட கோவிச்சிண்டு என்னடா உளறிண்டிருக்கேன்னு கேட்டான்.

தர்மன் : என்னாங்க இது. சாஸ்திரம் பிராயச்சித்தம்னு ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டிங்களே?

கேசவப் : போயிடலேடா தர்மா. சாஸ்திரத்திலே சொல்லியிருக்கிற பிராயச்சித்தப்படி உன் மகன் யுத்தத்திலே செய்திருக்கிற பாப கிருத்தியங்களுக்கு ஒரு சுத்தி ஹோமம் செய்தால் நோக்கு விமோசனம் உண்டு.

தர்மன் : செலவு நிறைய ஆகுமோ?

கேசவப் : பிரமாதமா ஆகாது. ஒரு அறநூறு வராகன் பிடிக்கும்.

தர்மன் : அடேயப்பா! ஆறு நூறு. அவ்வளவு ஏது எங்கிட்டே?

கேசவப் : தர்மா. அரை நூறு. அதாவது, ஐம்பது வராகன். ஆறு நூறு இல்லே.

தர்மன் : அப்படிச் சொல்லுங்க. நாள் பாருங்க.

கேசப் : ஏன், நாளைக்கே திவ்யமான நாள்.

பாலச் : ஓய்! ரொம்ப லட்சணங்காணும்! நாளைக்குக் கரிநாள் தெரியாதோ?

கேசவப் : யாருங்காணும் சொன்னது நோக்கு?

பாலச் : தர்மா! நாளைக்குக் கரிநாள். கேசவப்பட்டர் அவசரப்பட்டு சொல்லிவிட்டார். நாளைக்கு மறுநாள் ஹோமம் நடத்திவிடலாம்.