௨௨
சந்திரிகை
வாலிபப் பருவம்; டிப்டி- கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறார். எத்தனை கோடி தவம் பண்ணியோ, அவளுக்கு அப்படிப்பட்ட புருஷன் கிடைக்க வேண்டும்” என்றாள்.
அப்போது வீரேசலிங்கம் பந்துலு:— “அந்த கோபலாய்யங்கார் நீ சொன்ன லக்ஷணங்களெல்லாம் உடையவரென்பது மெய்யே. ஆனால் சாராயம் குடிக்கிறார். மாமிச போஜனம் பண்ணுகிறார். கட்குடியர் வேறென்ன நல்ல லக்ஷணங்களுமுடையவராக இருப்பினும் அவற்றை விரைவில் இழந்து விடுவார்கள். அவர்களுடைய செல்வமும் பதவியும் விரைவில் அழிந்து போய்விடும்“ என்றார்.
இது கேட்டு விசாலாக்ஷி:— “சரி. அவர் என்னை விவாகம் செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யுங்கள். அவருடைய கெட்ட குணங்களையெல்லாம் நான் மாற்றி விடுகிறேன்’ என்றாள்.
“குடி வழக்கத்தை மாற்ற பிரம தேவனாலேகூட முடியாது“ என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.
அதற்கு விசாலாக்ஷி:— “என்னால் முடியும். சாவித்திரி தன் கணவனை யமனுலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரவில்லையா? பெண்களுடைய அன்புக்கு சாத்தியப்படாது யாதொன்று மில்லை. நான் அவருடைய மாம்ஸ போஜன வழக்கத்தை உடனே நிறுத்தி விடுவேன். மது வழக்கத்தை ஓரிரண்டு வருஷங்களில் நிறுத்தி வைப்பேன். மற்ற லட்சணங்களெல்லாம் அவரிடம் நல்லனவாக