உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬ ௪

சந்திரிகை

அவள் மயிலாப்பூரில் பத்து நாள் இருந்துவிட்டு வரலாமென்றும், இதற்கிடையில் அவஸரம் நேர்ந்தால் தாம் மயிலாப்பூருக்குக் கடிதமனுப்பி விசாலாட்சியைத் தருவித்துக் கொள்ளக் கூடுமென்றும் தெரிவித்தார்.

”மயிலாப்பூரில் உன் பந்துவின் விலாஸ மெப்படி?” என்று பந்துலு கேட்டார்.

அதற்கு விசாலாக்ஷி:— ”என் அம்மங்காருடைய புருஷன் மயிலாப்பூரில் லஸ் சர்சு ரஸ்தாவிலிருக்கிறார். அவருடைய பெயர் ஸோமநாதய்யர். ஆனால் அவரும் என் அம்மங்காரும் அவர் வீட்டிலிருக்கும் அவருடைய தாயாரும் மிகவும் வைதிக நம்பிக்கைகளுடையவர்கள். நான் மறுபடி விவாகம் செய்துகொள்வதில் அவர்களுக்கு ஸம்மதம் இராது. விவாகம் நடந்து முடியும்வரை. நான் விவாகம் செய்துகொள்ளப் போகிறேனென்ற விஷயத்தை என் பந்துக்களுக்கு அநாவசியமகாத் தெரிவிப்பிதில் எனக்கு ஸம்மதமில்லை. ஆதலால், தாங்கள் நான் இருக்குமிடத்துக்கு ஆளேனும் கடிதமேனும் அனுப்ப வேண்டியதில்லை. இன்ன தேதியன்று நான் இங்கு வரவேண்டுமென்று இப்பொழுதே சொல்லிவிடுங்கள். அந்தத் தேதியில் நான் இங்கு வருகிறேன். அதற்கிடையே என்னை மறந்து போய்விடாமல் என் காரியத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருங்கள்.” என்றாள்.

அப்போது பந்துலு:— “நான் உன்னை மறக்கவே மாட்டேன். உன் விவாகம் நடப்பதற்-