பக்கம்:சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பும் உறவுமுறைச் சொற்களும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வு முன்னுரை

தமிழர்களின் உறவுமுறையில் மக்கள் வாழும் பகுதியின் அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்தகைய வேறுபாடுகள் இந்த ஆய்வில் குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாட்டின் மையப் பகுதியாகிய தஞ்சை மாவட்டத்தின் சில கிராமங்களில் சேகரிக்கப்பட்ட செய்திக்கூறுகளின் அடிப்படையில் இந்த ஆய்வுநூல் எழுதப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மூன்று அல்லது நான்கு தலை முறைகளைச் சேர்ந்த மக்களைக் குறித்த செய்திக் கூறுகள் குடிவழிப்பட்டிகல் (Genealogical Particulars) மூலம் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. இதனை மனதிற் கொண்டு இந்நூலின் தலைப்பில் "சமகாலத் தமிழர்களின் (Contemporary Tamils) உறவுமுறை" என்று குறிப்பிடப் பட்டது.

ஆய்வின் முக்கியத்துவம்

உறவுமுறையானது பல் கோணங்களில் ஆராயப்பட்டு வருகிறது. உறவுமுறை ஆய்வில் சமூகவியலார், மானிடவியலார் மற்றும் மொழியியலார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பல குறிப்பிடத்தக்க உறவுமுறை