பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


எவ்வளவு அழகான உவமை மூலம் விளக்குகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்!உடைகளை வண்ணான் கல்லிலே அடிக்கிற பொழுது, கல்லில் அடிக்கிற காட்சி உடனே தெரிந்து விடுகிறது. ஆனால், அப்படி அடித்த உடனே வருகிற ஓசை, தாமதமாகத்தான் வருகிறது காட்சி உடனே கிடைக்கும் என்பதை நீலகேசி காட்டுகிறது.

பெருங்கதையிலே அவர்கள் ஒரு எந்திரப் பாவையைக் காட்டுகிறார்கள் எந்திரக் கிணறு காட்டுகிறார்கள் ஹோமருடைய இலக்கியத்திலே ஒரு குதிரை வரும் அபூர்வமாகச் செய்த குதிரை, பகைவர்கள் ஓடிவிட்டார்கள் என்று அந்தக் குதிரையை அரண்மனைக்குள்ளே கொண்டு போனார்கள் திடீரென்று அந்தக் குதிரையினுடைய வயிற்றைப் பிளந்து கொண்டு, வெளிவந்த வீரர்கள் அந்தக் கோட்டையைப் பிடிப்பார்கள் அப்படி ஒரு காட்சி அந்தக் கிரேக்க இலக்கியத்திலே வரும். அதே மாதிரி ஒரு காட்சியை, பெருங்கதையிலே பார்க்கிறோம் அதே மாதிரி ஒரு எந்திர யானை அழகான யானை, அதை உள்ளே கொண்டு போகிறார்கள். அந்த யானையின் உள்ளேயிருந்து வீரர்கள் புறப்பட்டு வருகிறார்கள் இது கிரேக்கத்தினுடைய சாயலா அல்லது ஒரே காலத்திலே அந்தச் சிந்தனைப் போக்கு அப்படிப் போயிருக்கிறதா? என்று சிந்தனையைத் தூண்டுவது மட்டுமல்ல, விஞ்ஞானங்களையெல்லாம் அவர்கள் எவ்வளவு கூர்மையாகப் பார்த்திருக்கிறார்கள் என்பதற்கும் இவை சான்றுகளாக விளங்குகின்றன.

அதுமட்டுமல்ல, இந்தச் சமணர்கள் தங்களுடைய பெயர்களைக்கூட பத்திரப்படுத்தாமல், அவர்கள் பாட்டுக்குப் போய்விடுகிற காட்சியைப் பார்க்கிறோம் சில சமயங்களிலே சில நூல்களிலே, எழுதியவர்கள் யார் என்பதே தெரியாமல் போய் விடுகிறது எழுதியவர் யார்