பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

கின்றார்கள். வீரசோழியத்தைப் பற்றி நாம் அறிவோம். வீரசோழியம் என்ற இலக்கண நூல் மறைந்துவிட்ட போதிலும் கூட பழய தொல்காப்பியம் கூறிய ஐந்து இயல்புகளையும் சேர்த்து வடமொழியோடு விரவி ஒரு புதிய நூலாக உருவாக்கப்பட்டது. இதை எழுதியவர் புத்தமித்திரர் என்பவர். இவர் வீரசோழியம் என்று ஏன் பெயரிட்டார் என்றால், கி.பி. 1063 லிருந்து கி.பி. 1070 ஆண்ட வீர ராஜேந்திரன் என்ற சோழ மன்னனின் வேண்டுகோளின்படி அதை எழுதினார். அதனால் வீர சோழியம் என்று அமைக்கப்படுகிறது. அதில் அவர் கூறுகின்றார்.

நாமே எழுத்து, சொல், நற்பொருள் யாப்பலங்கார மெனும்
பாமேவு பஞ்ச அதிகார மாம்பரப் பைச்சுருக்கி
தேமேவிய தொங்கல் தேர்வீர சோழன் திருப்பெயரால்
பூமேல் உரைப்பன் வட நூல் மரபும் புகன்று கொண்டே'

ஆகவே ஐந்து இலக்கணங்களையும் ஒன்றாகச் சேர்த்து, சுருக்கி வட நூல் மரபோடு கலந்து விரவி வழங்குகின்றார் எனத் தெரிகின்றது. இந்த வீரசோழியத்திற்கு உரை எழுதியவர் மற்றொரு பெளத்தர் பெருந்தேவனராவார். வீரசோழியத்தைவிட இதன் உரை இலக்கியச் செறிவு உடையதாகக் காணப்படுகிறது. இந்த உரைக்கோவையில் புத்தரைப்பற்றி மிக அழகிய பாடல்கள் இடம் பெறுகின்றன. யாப்புப் படலத்திலோ, எடுத்துக்காட்டாக, புத்தரைப் பற்றிய மிகஅழகிய பாடல்களைப் பெருந்தேவனார் குறிப்பிட்டிருக்கின்றார். இது தவிர வேறு பல சிறு நூல்களையும் பெளத்தர்கள் இயற்றியிருக்கின்றனர். அவற்றின் ஆசிரியர்கள் யாவர்? காலம் எது என்பது நமக்குத் தெரியவில்லை. அக்காலத்திலே நிகழ்ந்த சமயப் போட்டி காரணமாக அக்காலச் செல்-