பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


தமிழ் எழுத்து உருமலர்ச்சிக்கும் பெளத்தர்கள் எவ்வாறு உதவினார்கள் என்பதை சுருக்கமாக நாம் பார்த்தோம்.

இப்பொழுது இலக்கிய வளர்ச்சிக்கு பெளத்தர்கள் எத்தனை தொண்டு ஆற்றினார்கள் என்பதைக் காண வேண்டும், அவர்கள் யாத்த இலக்கிய நூல்களிலே ஒன்று தான் முழுமையாகக் கிடைத்துள்ளது. அதுவே 'மணிமேகலை'. அது 30 கதைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதை எழுதியவர் சாத்தனார்.'சாஸ்தா' என்பது புத்தருடைய பெயர்களில் ஒன்றாகும். ஆகவே அவர் சாத்தனார் என்று தம்மை அழைத்துக் கொண்டார். பல சாத்தனார்கள் இருந்ததன் காரணமாக அவர் சீத்தலை ஊரைச் சேர்ந்த சீத்தலைச் சாத்தனார் என்று பெயரை வைத்துக் கொண்டார். இவர் மணிமேகலையை எழுதியது மட்டுமல்லாமல், இவருடைய பாடல்கள் ஆங்காங்கே அகநானூரில் ஐந்தாகவும் புறநானூரில் ஒன்றாகவும் குறுந்தொகையில் ஒன்றாகவும் நற்றிணையில் மூன்றாகவும் பரவிக் கிடக்கின்றன. மணிமேகலை என்பது பெரும்பாலும் ஆசிரியப் பாக்களாக வரும் இலக்கியக் களஞ்சியமாகும் இதுபோன்று நாம் இழந்துவிட்ட மற்றொரு செல்வம் "குண்டலகேசி பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும், சமய வாதங்கள் நிகழ்ந்து வந்த காலத்திலே தர்க்க ரீதியாக, பெளத்தக் கருத்துக்களை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது "குண்டலகேசி". நீண்ட சுருண்ட குண்டலம் போன்ற கேசத்தை உடையவளானபடியினாலே குண்டலகேசி என்று பெயர் வழங்கினார்கள். மணிமேகலை தமிழன்னைக்கு அணிவிக்கும் மேகலையாக இடையில் ஒளிர்கின்றது. குண்டலகேசியானது தமிழன்னையின் காதுகளில் குண்டலமாக மிளிருகின்றது. சிலம்பையும், சிந்தாமணியையும் தமிழ் அன்னைக்கு அளித்த தமிழ்ப் பெரியார்களோடு, பெளத்த பெரியார்களும் தமிழ் அன்னையை அணி செய்து வந்திருக்-