பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


பெளத்தர் சாத்தனார் இயற்றிய ‘மணிமேகலை’ கவிதைக் களஞ்சியம்; இலக்கியச் சுரங்கம்; கருத்துச் சுரங்கம்; கற்பனைச் சுரங்கம். அந்திமாலைப் பொழுதை அழகிய சித்திரமாகத் தீட்டுகிறார் சீத்தலைச் சாத்தனார்.

“குணதிசை மருங்கின் நான்முதிர் மதியமும்
குடதிசை மருங்கின் சென்றுவீழ் கதிரும்.”

ஒருபுறம் முழுமதி எழுந்து வருகின்றது. மறுபுறம் போரிலே போராடி அயர்ந்து விழும் வீரனைப் போல் செங்கதிரோன் களைத்து விழுகின்றான். ஒருபுறம் வெள்ளி நிற முழுமதியும், மறுபுறம் பொன்னிற ஞாயிறும் நில மடந்தையின் காதுகளில் ஒளிரும் வெள்ளித்தோடும் பொன் தோடும் போல் ஒளிர்கின்றனவாம்.

“வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக
எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்”

இவ்வாறு சில இயற்கைக் காட்சிகள் காதல் ஏக்கத்தையும் பொழுது போய்விட்டதே என்ற ஏக்கத்தால் பொங்கி எழும் காம உணர்ச்சியையும் காட்டுகின்றன.

“அன்னச்சேவல் அயர்ந்துவிளை யாடிய
தன்னறு பெடையைத் தாமரை யடக்க”

பெண்-அன்னமானது, தாமரை மீது காமமுற்று அதிலே போய் விளையாடிக் கொண்டிருக்கின்றது. இந்த விளையாடுகின்ற அன்னத்தை விட்டுவிடக் கூடாது என்பதற்காக, தாமரையானது இதழ்களை மூடிக் குவித்துக் கொள்ளுகிறது. இதைப் பார்த்து ஆண் அன்னத்திற்கு உடனே சினம் எழுகின்றது. தனக்கே உரிய பெண்ணை எடுத்துக் கொண்டு போவதற்கு தாமரைக்கு உரிமையில்லை. ஆகவே அது பறந்து வந்து மலரைக் குத்திக் கிழித்துத் தூக்கிக் கொண்டு மேலே போல்விடுகின்றது. ஆகவே,