பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

ஆயிரக் கணக்கான ஐரோப்பிய ஆண்கள் நீண்ட காலப் பிரிவில் இந்தியாவில் நிற்க நேரிட்டபோது சோதனை ஏற்பட்டது தவிர்க்க முடியாதது. எனவே ஐரோப்பிய ஆடவர்க்கும் இந்தியப் பெண்களுக்கும் உறவு ஏற்படுவது கட்டாயமாகிவிட்டது. ஐரோப்பியர் வந்து இறங்கிய ஆதி இடம் கேரளமாக இருந்தமையால் இந்த வாய்ப்பு மிக இலகுவாகிவிட்டது. தென்னிந்தியாவைப் பொறுத்தளவு மிக முன்பே நம்பூதிரிகளை ஏற்று முதலில் ஆரிய மயமானவர்கள் மலையாளிகளே. அதனைப் போல வாஸ்கோடகாமா வரவிற்குப் பின்பு ஐரோப்பியரின் உறவை ஏற்று ஆதியிலேயே ஐரோப்பிய மயமானவர்கள் மலையாளிகளே. ஐரோப்பிய ஆண் கேரளப்பெண் இவர்களால் உருவான கலப்பினம் ஒரு சிக்கலை அக்காலத்தில் தோற்று வித்திருத்தல் வேண்டும். இந்தியாவில் ஆதி கிறித்துவ மதத்தின் கூறுகள் கேரளாவில் இருப்பதற்கு இஃதொரு முதன்மைக் காரணம்.

3. அரசியல் அடிமைத்தனம் நிலையானதன்று. பொருளியல் அடிமைத்தனமும் நிலையானதன்று. ஆனால் மொழி அடிமைத்தனமும், மனப்பான்மை அடிமைத் தனமும் நிலையானவை, மற்ற இரண்டைவிட நீடிப்பவை. எனவே அறிவாளிகளான ஐரோப்பியர் மொழி,பண்பாடு, மனப்பான்மை அடிமைத் தனங்களைத் தொலை நோக்கோடு அறிமுகப் படுத்தி இருத்தல் வேண்டும்.

மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் தமிழ் மண்ணைச் சார்ந்த இன்ன பிறவற்றையும் ஐரோப்பியர் கற்றுக் கொண்டதைவிட ஐரோப்பியர் தம் மொழி இலக்கியம், பண்பாடு, நாகரிகம் இவற்றைத் தமிழரிடம் திணித்ததே மிகப் பெரிய அளவை உடையது.

தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழ் இலக்கியம் என்பன தகுதியாவை, சிறந்தவை என்று ஒப்புக் கொண்ட ஜரோப்பியரின் எண்ணிக்கையை விட ஐரோப்பிய மொழி இனம்