பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

என்பதற்கு வெற்றி என்பது பொருள். இன்றைய சிரியா நாட்டின் பண்டைய பெயர் ஷாம் என்பது. ஆதலின் புதுக் குஷ்ஷாம் என்பதற்கு ஷாம் நகர வெற்றி எனபது பொருளாம். ஷாம் நகர வெற்றி பற்றிய செய்திகள் காவியத்தில் விரிவாகப் பேசப்படுகின்றன. திருமணி மாலை இபுறாகீம் நபி அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டுள்ளது. இபுறாகீம் உருவ வணக்கத்தை வெறுத்தவர். அவர் தந்தை ஆசறு உருவச் சிலைகள் செய்து விற்பவர். ஒரு நாள் தந்தை தன் மகனைச் சிலைகளை விற்றுவர அனுப்பினார். இபுறாகீம் "உங்கட்கு எவ்விதப் பயனோ இழப்போ தரமுடியாத இந்தச் சிலைகளை வாங்குவாருண்டா" எனக் கூறிச் சென்றார். ஒருநாள் நகரிலுள்ளோர் அனைவரும் ஒரு விழாவைக் கொண்டாட நகருக்கு வெளியில் குழுமினர். கோயிற் பூசாரிகளும் களியாட்டம் காணச் சென்றுவிட்டனர். விழாவிற் கலந்து கொள்ளாது ஊரிலேயே தங்கியிருந்த இபுறாஹீம் கோயிலினுட் சென்றார். அங்கு நடுவே பல்வகை மணிகளாலான பெரிய சிலையும், சுற்றிலும் இரும்பு, பித்தளை, கல் முதலியவற்றிலான சிறு சிறு சிலைகளும் இருந்தன. இபுறாஹீம் கோடாரியினால் சிறு சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து கோடாரியைப் பெரிய சிலையில் மாட்டிவிட்டு வெளியேறினார். திரும்பி வந்து பார்த்த நகர மக்கள் இபுறாஹீம்தான் இதைச் செய்திருப்பார் என அவரைக் கேட்க, அவரோ "எனக்கொன்றும் தெரியாது; நிற்கும் பெரிய சிலையைக் கேளுங்கள் அது சொல்லும்” என்றார். "இது பேசாது என்று தெரிந்தும் நீ எங்களைக் கேலி செய்யலாமா” என்றனர். இபுறாஹீமோ "உங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய ஆற்றலற்ற இவற்றை ஏன் வணங்குகிறீர்" என்றார். இது கேட்ட தமுறுது மன்னன் இப்றாஹீமை நெருப்பில் எரியக் கட்டளையிட்டான். தீமூட்டி இபுறாஹீமை ஓர் இயந்திரத்தில் பிணைத்து நெருப்பினுள் தள்ளினார்கள் "வெந்தழலே இபுறாஹீ முக்கு இதமளிக்கும் வண்ணம் நீ குளிர்ந்துவிடு" என