பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

இறைகட்டளை பிறந்தது (திருக்குர்ஆன் 21:69) செந்தழல் அவருக்கோ தாமரை பூத்த குள நீராகக் குளிர்ந்தது, நமுறூது மன்னன் இப்றாஹீமை நாடு கடத்தினான். அவருக்கு இஸ்மாயீல் என்றொரு குழந்தை இஸ்மாயீல் பச்சிளம் குழந்தையாக இருந்தபோது இப்றாஹீம் தம் குடும்பத்துடன் மக்காவில் குடியேறினார். ஒருநாள் குழந்தை இஸ்மாயீல் தண்ணீர் வேட்கையால் தவித்த போது தாயார் நீர் தேடி அலைந்து திரிந்தார் அது வேளை வானவர் தலைவர் ஜிபுறயில் குழந்தையிருந்த இடத்தில் குதிகாலால் மிதிக்க அங்கு ஒரு பள்ளமுண்டாகி இனிய நீர் குமிழியிட்டது. தண்ணீர் தேடிப் பயனின்றித் திரும்பிய தாய் குழந்தையருகில் நீரைக் கண்டதும் அது வற்றிவிடக் கூடாதே ஜம் ஜம் (நில்நில்) எனக் கூறியவராய் நீர் எடுத்துக் குழந்தைக்கு ஊட்டினார் அன்று பெருக்கெடுத்த நீர் இன்றுவரை வற்றாது 'ஜம்ஜம்' கிணறு என்னும் பெயருடன் விளங்கி வருகிறது. இஸ்மாயீலுக்குப் பன்னிரண்டு வயதானபோது அவரைப் பலியிடுமாறு இறைவன் இப்றாஹீம் கனவில்அறிவித்தான் இப்றாஹீம் கத்தியும் கயிறும் எடுத்துக் கொண்டு மகனைப் பலியிட அழைத்துச் சென்றார் வழியில் மகனிடம் அவரைப் பலியிடவிருப்பதைச் சொன்னார் மகனோ "தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படி செய்யுங்கள்" என்றார். அறுக்க வாய்ப்பாயிருக்கும் பொருட்டுக் கயிற்றால் பிணிக்குமாறும் அறுக்கும்போது மனம் மாறிவிடாதிருப்பதற்காகத் தம்மைக் குப்புறப் போட்டு அறுக்குமாறும் இஸ்மாயீல் கூறினார். பிறகோ அறுப்பதைத் தான் காண வேண்டும் என்பதால் கயிற்றை அவிழ்க்குமாறும் கத்தியைக் கழுத்தில் அழுத்துமாறும் கேட்டுக் கொண்டார் இப்றாஹீமும் அவ்வாறே கத்தியை வைத்து அழுத்தினார் கத்தி மழுங்கியதே தவிரக் கழுத்து அறுபடவில்லை!

தந்தை வெட்ட இருப்பதைச் சொன்னபோது இஸ்மாயீல் தந்தை சொல் போற்றுவதே கடன் என இசைகிறார் என்பதை,