பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

என்றும் பாடியிருக்கக் காண்கிறோம். இவற்றால் நூல் எழுந்த காலம் எழுதிய ஆசிரியர், எழுதத் துணை புரிந்தோர் போன்ற இன்றியமையாச் செய்திகளை ஐயத்திற்கிடமின்றி அறிய வாய்ப்பேற்படுகிறது.

அனைத்துக் காப்பியங்களிலும் இஸ்லாமியப் புலவர்கள் கடவுள் வாழ்த்துப் பகுதியை ஒரே முறையில் பாடியுள்ளனர். முதலில் அல்லாஹ்வை வாழ்த்தி, பின்னர் நபிகள் நாயகத்தை வாழ்த்துகின்றனர். பிறகு முறுசலீன்கள்; நபிகள் நாயகம் முகம்மதுவுக்கு முன்னர் இவ்வுலகில் 1,24,000 நபிமார் தோன்றியுள்ளனர். அடுத்து அவர்கள் பாராட்டப்படுகின்றனர்.

ஆராய்வின் மிக்கபேர் நூறாயிரத்துநா
லாறாயிரத்து நபிமார்
மாராயம் மிக்கபேர் வாயார வைத்தபேர்
வாழ்வார் சுவர்க்க பதியே

என உமறுவும்.

நாற்றிசையும் தீன்பயிரை வளர்த்தருள உதித்த
சின்ன நபிமார் என்றே
ஏற்றும் இலக்கத்தின் இருபத்திநாலாயிரவர்

என வண்ணக் களஞ்சியப் புலவரும் ஏத்திப் போற்றியுள்ளனர். அடுத்த நான்கு கலீபாக்கள்-அபூபக்கர், உமறு, உதுமான், அலிமார்-பாராட்டப்படுவர். அபூபக்கரின் ஆட்சிச் சிறப்பும், உமறுவின் தியாக உணர்வும், உதுமான் திருக்குர்ஆனைப் பதிப்பித்த செயலும், அலியார் 'துல்துல்’ எனும் குதிரைமீது அமர்ந்து செல்வதும் முதன்மைப்படுத்திப் பாடல்கள் தென்படுகின்றன. அலியார் குதிரை மீது செல்வதை உமறு.