பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அறபு மொழிப் பயிற்சியும் இசுலாமிய நெறியறிவும் இல்லாதோர் இப்பாடலைப் புரிந்து கொள்ள முடியாது.

தமிழில் சித்தர் பாடல்கள் இருப்பன போன்றே இசுலாத்திலும் ஞானப் பாடல்கள் உள்ளன. இசுலாமிய மெய்ஞ்ஞானிகள் சூஃபிகள் எனப்பட்டனர் திரு. மணவை முஸ்தபா அவர்கள் நடத்திய சூஃபி இலக்கியக் கருத்தரங்கில் ஏறத்தாழ 65 சூஃபிகள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டனர். அவர்கள் தமிழிலக்கியம், கலை, பண்பாட்டுக்குச் செய்திருக்கும் தொண்டுகளைத் தமிழுலகம் நன்றியோடு போற்றக் கடமைப்பட்டுள்ளது அனைவருடைய கருத்துக்களையும் இங்கே சொல்லக் காலம் இடந்தராதாதலின் ஒரு சிலருடைய பாடல்களை மட்டும் இங்கே காண்போம்! இசுலாமிய ஞான உலகின் பெரும் பாவலராகக் கருதப்படுபவர் தக்கலை பீர்முகம்மது சாகிபு ஆவார்கள். ஞானப் புகழ்ச்சி, ஞானமணிமாலை, ஞானப்பால், ஞானப்பூட்டு போன்ற பல அறிய நூல்கள எழுதியுள்ளார். ஞானப்புகழ்ச்சியில் அவர்,

தந்தையிலி தாரமிலி தானவனு நீயே
தன்மை கொடெவர்க்கு மொருதா பரமு நீயே!
மைந்திரிலி அன்னையிலி மன்னவனு நீயே!
மண்ணிலடி யார்க்கிரணம் வழங்குவது நீயே!
சிந்தைதனில் இடறுதனைத் தீர்த்தருள்வை நீயே!
தேட்டமறிந் தெனக்குதவி செய் பவனு நீயே!
அந்தமிலி நீயெனக்கோர் இழிவுவா ராமல்!
ஆதியே யானுன் அடைக்கலம் தானானேன்!

என இறைவனருளை வேண்டுகிறார்.

இவரே, சரியான குருவில்லாது அடைகின்ற ஞானம் முழுமை பெற்றதாகாது எனவும் கூறுகிறார்.

வழியான குருவில்லா வணக்கம் உள தெல்லாம்
புருடனில்லாள் வாழ்ந்த சுகமொக்கும்;