பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சொன்மினென் றமரர்வேண்டும் தொடர் மொழி மறுத்துப்பேசும்
முன்முறை புகழவந்த முகம்மது நபியுல்லாவே!

எனப் பாடியுள்ளார். நாமா, பார்சியில் உள்ள நூல்களில் ஒருவகையாகும். அவிநாமா, இபுலீசு நாமா, மிகுராஜ் நாமா எனப் பல நாமாக்கள் தமிழில் உள்ளன கதை என்னும் பொருளைக் கொண்டது. கிஸ்ஸா, இவ்வகைப் பிரபந்தம் இஸ்லாமிய சமயக் கதைகளைக் கூறுகிறது: மதாறு சாகிப் புலவர் பாடிய யூசுப் நபி கிஸ்ஸா, அப்துல் காதிறு சாகிபு பாடிய சைததுான் கிள்ஸா என்பன குறிப் பிடத்தக்கன.

போர் நிகழ்ச்சிகளைப் பற்றி முசுலிம்கள் பாடிய நூலுக்குப் படைப்போர் என்று பெயர். இதனை ஆங்கிலத்தில் (War ballads) என்பதற்கு ஒப்பாகக் கூறுவர். காசீம் படைப்போர், ஹாசைன் படைப்போர் எனப் பல படைப்போர் இலக்கியங்கள் தமிழில் உள்ளன. குஞ்சு முசு லெப்பை ஹாஜி ஆலிம் புலவர் பாடியுள்ள இறவுசுல்கூல் படைப்போர், நாட்டுப் படலம் நகரப் படலம் கொண்டு விளங்குகிறது. மதீன நகர்ப் படலத்தில் குர்ஆனை விளக்காகவும், கலிமாவை நெய்யாகவும் தீன் நெறியைத் திரியாகவும் அமைத்து அவர் பாடியுள்ளது வருமாறு:

வெற்றியிற சூல்மறை விளக்கினை நிறுத்தி
உற்றகலி மாநெயை உவப்பொடு நிரப்பிக்
குற்றமறு தீன்திரி குயிற்றிஇஸ் லாம் தீப்
பற்றுவர்கள் எங்கும்உயர் பாவைஇள மின்னார்!

சையிதத்து படைப்போரில் குஞ்சு மூசுப் புலவர் அபூபக்கரின் குதிரை சென்றதை,

காலில் ஐங் கதியைக் காட்டி
கருத்தினுள் திடத்தைக் காட்டி