பக்கம்:சமணமும் தமிழும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சமணசமயம் குன்றிய வரலாறு இந்து மதத்தில் பத்தி' அல்லது 'அன்பு' இயக்கம் தோன்றிய பின்னர், இந்துமதம் சமண மதத்தை எதிர்க்க ஆற்றல் கொண்டது என்று கூறினோம். பக்தி இயக்கம் எவ்வாறு சமண சமயத்தின் செல்வாக்கினை அழிக்க முடிந்தது என்பதைக் கூ நவாம். இச் செய்தியை அறிய வேண்மோனால், முதலில் 'வீடு' அல்லது மோட்சம்' என்னும் உயாதியை அடைவதற்கு இவ்விரு சமயத்தவரும் கொண்டுள்ள கொள்னககன் இன்னவை என்பதை அறிய வேண்டும். ஆதலின், வீட்டு நெறியைப் பற்றி இவ்விரு சமயத்தவரின் சருத்து இன்னதென்பதை விளக்குவாம். சமணசமயத்தவர் கொள்கை இது: அருகப் பெரு மான் விருப்பு வெறுப்பு அற்றவர். தம் மாட்டு பக்தி (அன்பு) செய்வோரிடத்திம் செய்யா தவரிடத்தும் உவப்பு வெறுப்பு இன்றி ஒரு தன்மைத்தாக இருக்கின்றார், தம்மை வணங்கித் தம்மாட்டுப் பக்தி செய்வோரின் பாவ புண்ணியங்களைப் போக்கி அவர்களுக்கு வீடு பேறளிப்பது விருப்பு வெறுப்பு அற்றவராகிய அவரது இயல்பு அன்று, மக்கள் வீடுபேறடையும் வழியை அவர் அருளிச் செய் திருக்கின்றார். அக் நெறியைக் கடைப்பிடித் தொழுகி முயற்சி செய்தால் அவரவர் வீடுபேறடையக் கூடும், துறவிகளுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தாரும் மகளிரும் ஈல்வினை செய்வாராயின், தெய்வப் பிறவி பெற்றுச் சுவர்க்க பதவி பெத முடியுமேயன்றி வீடுபேறு அடைய முடியாது. (சுவேதாம்பர சமணர்களுக்கு, பெண் மகளிரும் வீடுபேறடைய முடியும் என்னும் கொள்கை உண்டு.) சமணசமய நூல்களில் கூறப்பட்ட பதிகரு மப்படி ஒழுகினால் துறவிகள் மோட்சமடையப் பெறுவர். அவர்கள் அருகக் கடவுள் மாட்டுச் சரண் அடையவேண்டும். மோட்ச தெறிக்குத் துணையாக சிற்பது அறவொமுக்கம் ஒன்றுதான், இல்லத வொழுக்கத்தையும் தவத்தையும் துணையாகப் பற்றிக்கொண்டு அவரவர் தமது முயற்சி யாலேயே வீட்டுலகைக் கைப்பற்ற வேண்டும்.