பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உற்றார் உறவினர்கள் - சொந்த - ஊர் ஜனங்கள் நேசர்களும் கற்றாரும் தூற்றினாலும்- கொள்கை கைவிடுவதெண்ணோமடீ. உ ஆருயிரே! பெற்றெடுத்த தந்தை அன்னை மனங் கோணினாலும் சீரிய தோழர்களும்-ஓர்கால் சீறினு மனந்தளரோம். தூங்கிடோம் பசி பொறுப்போம் - சிறைத் துன்பமெதையும் சகிப்போம் எங்காதுழைப்போமடி- பூவில் இன்ப சமதர்மத்திற்கே. தூக்குமேடை ஏறத்தயார் - சுடும் துப்பாக்கிமுன் நிற்கத் தயார் நோக்கம் நிறைவேறுதற்கே- எந்த நோன்பு கொண்டிடவுந் தயார். சேவைக்கு அழைப்பு (அண்ணி தயை பண்ணி என்ற மெட்டு) பாப்பா ஓர் சொல் கேட்பாய்-நிதம் பரிவோ டிதம் சேர்ப்பாய் பாவையர்கள் சமதர்மச் சேவை செய்யும் தேவை சொல்வாய் 3. 5. (காதற் ) 6 [பாப்பா]