பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

110 பேச்சுக்கு முதற் பொருள் சுவையும் பயனும் உள்ள கருத் துக்கள். மாற்றான் வீட்டுத் தோட்டத்திலே பூத்திடினும் மல்லிகைக்கு மணம் உண்டல்லவா? ரசிக்கத்தானே செய் வோம். அதுபோலவே பேசுபவரின் கருத்து பயன் தருமா யின். கேட்பவரின் கூட்டுறவு எத்தன்மையதாக இருப்பி னும், அவர்கள் ஏற்றுக் கொள்வர். எனவே மேடைப் பேச்சுக்குக், கருத்துக்களைச் சேகரிப்பது சிந்தனையில் விளை யும்படிச் செய்வது மிக மிக முக்கியம். பூத்த மலரை அழ குறத்தொடுத்தல் போலக் கிடைத்த கருத்தை தொகுத்தும் வகுத்தும், பிரித்தும், சோல்லும் சொல், தெளிவான நடை நம்பிக்கை யூட்டும் போக்கு, இவைகளைக் கொண்டு பேச்சு அமைத்தல் வேண்டும், என்பதைவிட அமையும் நிலைபெற வேண்டும் என்பது பொருத்தமாக இருக்கும். தூய்மை யான நோக்கமும் தெளிவான அறிவும், கொள்கை வெல் லும் என்ற நம்பிக்கையும் இருக்குமானால். தட்டுத் தடுமாறி பேசும் பேச்சு நாளாவட்டத்தில் முழக்கமாகித் தீரும். அவர்போலப் பேசவேண்டும்.இவர் உபயோகித்த சொல்லை வீசவேண்டும். இரண்டோர் மேற்கோள் வேண் டும். எமர்சன், இங்கர்சால் ஆகிய யாரையாவது துணைக்கு அழைத்தே ஆக வேண்டும். இடையிடையே நகைச்சுவைக் காக விகடத்துணுக்குகளைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்கொண்டு பேச்சு அமைப்பது; ஒரு மல்லி,பக்கத் தில் தழை,பிறகோர் சாமந்தி,அடுத்துக் கொஞ்சம் தவனம் பிற்கோர் மணமில்லா மலர். பிறகு தழை என்ற முறையில் தொடுக்கப் படும் கதம்ப மாலையாகும் - கதம்பம் மலர் குறைவாகவும் தழை அதிகமாகவும் இருப்பின் மாதர் கொள்ளார். அதுபோலவே பேச்சும், கருத்து அங்கொன் றும் இங்கொன்றுமாகி, சுவைக்குதவாதன அதிகமாக இருப்பின் எவரும் கொள்ளார். எனவே கருத்து மிக மிக முக்கியம்.ந் நடை வானவில் அதிக நேரம் அழகளிக்காது.