பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


ஓய்வு நேரத்தை, உல்லாசமாகக் கழிக்க வேண்டுமானால் அதற்காகச் செலவிட வகை கிடைக்கவேண்டும்--செலவு பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்துக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும், ஓய்வின் சுவையைப் பருகி--வேலைக் கலைப்பைப் போக்கிக் கொள்ள வேண்டும். களைப்பைப் போக்கிக் கொள்ள வெப்ப நாட்களில் குளிர்ந்த பானமும், குளிர் நாட்களிலே சூடான பானமும், எல்லா நாட்களிலும் இனிய முகமும், அன்பு மொழியும், கொண்ட குடும்பமும் தேவை--இது கிடைத்தான பிறகு, ஓய்வைக் கழிக்கும் முறையைக் கண்டறியும் போது அறிவும், அறிந்தபிறகு அந்த முறைப்படி பொழுது போக்கும் வசதியும் ஏற்படவேண்டும்.

ஓய்வு நாட்களிலே, படகு வீட்டிலே தங்கி காஷ்மீர் காட்சியைக் கண்டு களிக்க வாருங்கள் குடும்பத்துடன்--என்ற விளம்பரத்தைக் காணும் ஆபீஸ் அலுவலவர்கள், கதையிலே நந்தனார் பாடுவதாகச் சொல்வார்களே, அதைப் போல, நாளைப் போகாமலிருப்பேனோ நான்--என்று பாடி அழ முடியுமே தவிர, வேறென்ன செய்வது?

உதக மண்டலத்து வனப்பு. கொடைக்கானல் குளிர்ச்சி குற்றாலக் கவர்ச்சி, இவைகளைக் கண்டு களிக்கும் பொழுது போக்கு--ஓய்வு--எவ்வளவு பேருக்குக் கிடைக்கமுடியும்? வாழ்க்கைத் தரம் பொதுவாக உயர்ந்தாலொழிய இத்தகைய 'உல்லாசம்' சிலர் சொல்லப் பலர் அதிசயிக்கும் பேச்சளவாகத்தான் இருந்து தீரும். வாழ்க்கைத்தரம் உயருவதுடன் உதகமண்டலம், குற்றாலம், கோடைக் கானல் புதிது புதிதாக அமைக்க வேண்டும்--அதாவது ஓய்வு இடங்கள். பொழுது போக்குமிடங்கள் புதிது புதிதாக ஏற்படுத்தவேண்டும். அந்தந்த வட்டாரத்து மக்களின் பணக்கண்ணுக்குத் தெரியக் கூடிய தொலைவில், தமிழ் நாட்டிலே பல இடங்கள் இப்படி ஏற்பாடு செய்ய முடியும் பொது முயற்சியால்--துரைத்தனத்தாரின் திட்டத்தால்.

ஓய்வு நேரம்--மேலே வானத்திலே நிலவு, நட்சத்திரம் காண்கிறோம். களிப்புத்தான்--ஆனால் எவ்வளவு நேரம் காண முடியும்--அந்த ஊர் நகராட்சி மன்றத்தாரோ பொதுநலக் கழகத்தாரோ, ஒரு அருமையான டெல்ஸ்