பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94 தங்கம் உண்டு எமது பூமியில் என்று ஆனந்தக் களிப்புச் சிந்து பாடியிருக்கிறாம். எல்லாம் சரி: உமனது நாட்டுக் கவில் நிலையைக் கூறு என்று கேட்டால், நாம் வெட்கித் தலை குனியும் நிலையில் இருக்கிறது. வேத வேதாந்திகள், தித்தாத்தி, சிரோமணிகள் திரு அருளைப் பெற்றவர்கள் எமது நாட்டிகே உண்டு என்று பேசலாம்; பேசுகிறோம். இன்னும் சிலர் பேசிக்கொண்டே இருக்கத்தான் செய் கின்றனர். ஆனால் கண்ணனுக்குக் கையெழுத்துப் போடத் தெரியுமா என்றால், தலையை ஆட்டுகிறான்; முத்தனோ மறந்துவிட்டது என்று கூறுகிறாள்; முனியன் கையெழுத் திடுகிறான். ஆனால் முன்னெழுத்தும் கடையெழுத்தும் சரி யாக இருக்கிறது. இடையிலே உள்ள எழுத்துக்களோ சம்பந்த மற்றவையாக உள்ளன. இந் நிலை இருக்கிறது நாட்டு மக்களிலே மிகப் பெரும்பாலானவர்களுக்கு, கூரிய வான் பலமான கேடயம், அஞ்சா நெஞ்சு; ஆனால் அந்த வீரனின் வழி பழுது.இந் நிலை நாட்டுக்குச் சிறப்பும் அளிக்காது. நல்லாட்சிக்கு வழி கிடைக்காது. நாட்டு நிலை உலக கிலைக்கு ஏற்ப வளர்ந்தாகவேண்டும். இதற்கு வீட்டு நிலை மாறவேண்டும்-"வீட்டிற்கோர் புத்தகசாலை' என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை, மலைகண்டு, நதிகண்டு, மாநிதிகண்டு அல்ல, ஒரு நாட்டை உலகம் மதிப்பது - அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே மாநிலம் மதிக்கும். மனவளம் வேண்டும் - மிக மிக விரை வில்- மிசு மிக அதிகமாக எழுத்தறிவற்றவர் ஏராளம் இந்த நாட்டில் இது பெருங்கேடு. கல்வி பெற்றவர்கள் அனைவருக்குமாவது நற்பண்புகள் செழிக்கும் பண்ணைக A ளாக நாட்டுக்கு வலியும் வனப்பும் தேடித்தரும் கருத்துக் கள் மலரும் சோலையாக உள்ளனவா என்றால், இல்லை என்று பெருமூச்சுடன் கூறுத்தான் ஆகவேண்டும் -