பக்கம்:சமயச் சொல்லகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

இராமானுசர் — வைணவ ஆசாரியர். விசிஷ்டாத்துவைத ஸ்தாபனாசாரியர்.

இராமிலன் — மன்மதன்.

இராயப்பர் — (St. Peter) பேதுரு கிறிஸ்தவப் பெரியார் (கி)

இராவணன் — கடவுள் (God as being without form) இராவணன்றனை யூன்றி யருள் செய்த விராவணன் (தேவா. 58, 11)

இரியாசமிதி — சிற்றுயிர்கள் காலில் மிதிபடாதபடி விலக்கு வதற்காகத் துறவிகள் மயிற்பீலியினைத் தம்கையில் வைத்திருப்பர். இவ்வொழுக்கம் இரியாசமிதி எனப்படும். (சமணம் பக்.83)

இருக்கன்—பிரமன், தரை விசும் பைச் சிட்டித்த விருக்கன் (திருப்பு. 419)

இருக்கு — 1. வேதமந்திரம் 2. இருக்கு வேதம்

இருக்கு வேதம் — முதல் வேதம் (திவா.); (திவ்.பெரியாழ். 5, 1, 6)

இருசமயவிளக்கம் — சைவ வைணவ சமயங்களை ஆராயும் ஒரு நூல்

இருடபத்துவசன் — சிவன்

இருடிகேசன், இருடீகேசன் — திருமால் (திவ். திருவாய், 2, 7, 10)

இருண்மலம் — ஆணவமலம் (சிவப்பிர.2,1)

இருத்து, இருத்துவிக்கு — யாகபுரோகிதன். இருத்துவிக் கெனப்படு மன்னவர்க்கு (காஞ்சிப்பு. சிவா.34)

இருதலைமாணிக்கம் — முத்தி பஞ்சாட்சரம் (சங். அக.)

இருந்த திருக்கோலம் — மாலின் வீற்றிருக்கும் இருப்பு

இருந்தவளமுடையார் — கூடலழகர் (திருமால்) (சிலப், 18, 4, அரும்.)

இருப்புயிர் — நரகருயிர். இருப் புயி ராகி வெந்து (சீவக. 3108) (ச). Souls that undergo purgation in hell, one of five—classes of souls arranged according to spiritual purity.

இருவினையொப்பு — புண்ணிய பாவங்களில் சமபுத்தி செய்து விடுகை (சை) (சி.போ.பா. 8, 1 பக் 362, புதுப்.)

இருஷிகேசன், இரேசன் — திருமாலுக்கு ஒரு பெயர்

இரௌரவம் — 1 (a Saiva scripture in Sanskrit, of a part of which the Tamil Civañana.