பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gA.tanr 70 g

'பற்று வார்சிலர் அடருவர் சிலர்கரம் பதிய

வெற்று வார்சிலர் இணைவிரல் மடக்கிமெய் சேப்பக் குற்று வார்சிலர் அடிக்கடி கொதித்தவர் அலது சற்று மாறினர் அவர்கொடுங் காபிர்கள் தாமே"

"அடிமின் என்பவர் சிலர்சிலர் ஆதகா திவரை

விடுமின் என்பவர் சிலர்.சிலர் அவர்களை வெகுண்டு பிடிமின் என்பவர் சிலர்சிலர் இவனுயிர் பிசைந்து குடிமின் என்பவர் சிலர்சிலர் காபிர்கள் குழுமி'

ஹிஜிறத்துக் காண்டம்; யாத்திரைப் படலம் : 21, 22

எதுகையும் மோனையும் அமையுமாறு சீர்களை

அ ைம ப் பது சொல்லாட்சித் திறமைகொண்ட கவிஞருக்குக் கைவந்த கலையாகும். ஆயிரக்கணக்கான பாடல்களைக் கொண்டுள்ள இச் சீறாப்புராணத்தில் தொடையழகு மிகுதியும் இடம்பெற்றிருப்பது போற்றுதற் குரியது.

"இவ்வண்ணஞ் சோலை யெல்லாம் எய்திய வருத்தம் கண்டு மைவண்ணக் குடையார் அந்த மருமலர்த் துடவை புக்கிக் கைவண்ணங் காட்டிச் சொகைக் காத்தருள் செய்து பாரிற் செவ்வண்ணப் படுத்த வெண்ணிச் சிறப்புடன் வருக

என்றார்” ஹிஜிரத்துக் காண்டம்; ஒட்டகை பேசிய படலம் : 1.3

'கண்ப டைத்தவர் இவரெழிற் காண்பவர் முகத்திற்

புண்ப டைத்தவர் இவர்தமைக் காண்கிலார் புதியோன் பண்ப டைத்தசொன் மறைநபி பதம்பணி யாதார் மண்ப டைத்ததிற் படைப்பல ரெனச்சிலர் வகுப்பார்”

துபுவ்வதது.க காண்டம்; மதியை அழைப்பித்த t_ft_, avtb : 90