பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-l.ւյՈ, 127

ானே பிறக்குமிடமாகக் கொள்கிறது! இத்தொடர் ஆண்டவனைக் குறிக்கும்பொழுது பிறப்பு-இறப்பு(பில்-இல்லாதவன் என்று ஆகும். வடலூர் வள்ளலார் இறைவனை பிறப்பும் வளர்ப்பும் இல்லாதவன்; அவன். அருப்பெருஞ் சோதியன்; சாதி சமயச் சண்டை வேண்டா, சன்மார்க்க நெறி நடப்போம்; வாரீர்” என்று _கைவரை நோக்கி அறைகூவல் விடுகின்றார். அப்பாடல் _மாறு,

ஆதியும் நடுவும் அக்தமும் இல்லா

அருட்பெருஞ் சோதியென் னுளத்தே நீதியிற் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் சாதியும் மதமும் சமயமுங் தவிர்த்தே சத்திய சுத்தசன் மார்க்க நீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விழைந்தே.

இது மட்டும் அல்ல; ஒவ்வொரு சமயத்தவரும் ஒவ்வொரு பெயர் கூறி ஒவ்வொரு கடவுளை வணங்கி வழிபட்டாலும் தெய்வம் ஒன்று என்பதே பெரியோர்கள் கண்ட உண்மையாகும். திருநாவுக்கரசர், "கடவுள் ஒருவரேதான்; Լ1GՆ) கடவுள்கள் இல்லை; ஒரே கடவுள்தான். தம் பேராற்றலால் கடவுள் உலகைப் படைத்துள்ளார். அந்த ஒரே கடவுளே பல வடிவங்களில் பல பெயரில் காட்சி தருகிறார்; பல செயல்களைச் செய்து வருகிறார். படைத்தல், காத்தல். அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் சிறப்பாகச் செய்துவருகிறார்” என்று குறிப்பிடுகின்றார். பண் சுமந்த அப் பாடல்

வருமாறு :