பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 2i.

நம்பிக்கைகளுள் ஒன்றாகிய முத்தியளிக்கும் தலங்கள் குறித்து இவண் நோக்கலாம்.

முத்தித் தலங்கள்

தமிழ்ச் சான்றோர் முத்தியளிக்கும் தலங்களாக நான்கு ஊரைக் குறிப்பிடுவர். திருவாரூர், சிதம்பரம், திருவண்ணாமலை, காசி என்பன அவ்வூர்கள். இவற்றுள் திருவாரூர் பிறக்க முத்தி தருவது; சிதம்பரம் தரிசிக்க முத்தி தருவது; திருவண்ணாமலை நினைக்க முத்தி தருவது; காசி இறக்க முத்தி தருவது. இக்கருத்துகளை.

தெரிசனம் செயத் தில்லையிற் கமலையிற் செனிக்க மரணமாய்விடக் கங்கைசூழ் வாரணாசியிலே அருணை மாங்கர் நினைத்திட முத்தியஞ் செழுத்தும் பிரணவத் தொடெப் பேர்களு முரைக்கிலும் பெறலாம்

என்னும் அழகிய பாடலில் காணமுடிகின்றது நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல பண்பு முதலியவற்றால் நற்கதி பெற்றோர் வாழும் திருத்தலங்களாக இவை போற்றிக் கூறப்பெறுகின்றன. கட்டறுத்து வீடுபெற எண்ணும் ஒவ்வோர் உயிரும் இத்தலங்களை நாடுதல் இயல்புதானே! இனி இத்தலங்களின் சிறப்புகளை நுணுகி நோக்குதல் நல்லது.

திருவாரூர்

இன்றைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள சைவத் நிருப்பதி திருவாரூர். தேவார மும்மூர்த்திகளாகிய ஆளுடைய பிள்ளை, அப்பர், ஆரூரர் ஆகிய மூவரின் பாடன் பெற்ற த ல மா. க இவ்வூர்த்திகழ்கின்றது.

வன்மிகநாதர் என்னும் திருப்பெயருடன் இக்கோயிலின்

சம,_2 --